கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு

டிரெண்டிங்

விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்தக் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இது சத்தான சிறந்த மதிய உணவாக வீட்டில் உள்ள அனைவருக்கும் அமையும்.

என்ன தேவை?

பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 2
புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
சாதம் – ஒரு கப்
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
நெய் – ஒரு டீஸ்பூன்

வறுத்து அரைக்க…

எண்ணெய் – தேவையான அளவு
உளுந்து – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு

தாளிக்க…

கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பாதி வெந்தும் அதில் நான்காக வகுந்த கத்திரிக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) சேர்த்துக் கிளறி பின்பு உப்பு, புளிக்கரைசல்விட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் ஏழு நிமிடங்கள்விட்டு, அடுப்பை அணைக்கவும்.

இதில் வேகவைத்த சாதம் சேர்த்து அதன்மீது வறுத்துபொடித்த பொடியைத் துாவி ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால், மணம் வீசும் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு

லிப்ஸ்டிக்கும் ஒரு பிரச்சன தான் போல : அப்டேட் குமாரு

செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமீன் கிடைக்குமா? : உச்சநீதிமன்றம் தீர்ப்பு மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0