ஐ போனுக்காக 3 நாட்கள் பட்டினி … கட்டு கட்டாக பணத்துடன் வந்த பூ விற்கும் பெண்!

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. செல்போன் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தன் கையில் கட்டு கட்டாக பணம் வைத்துள்ளார். அருகில், அந்த இளைஞரின் தாயாரும் உள்ளார். பார்க்க ஏழ்மையான இளைஞராக அவர் காட்சியளித்தார்.

இதை பார்த்து அதிர்ந்து போன, செல்போன் கடையில் இருந்தவர்கள் மெல்ல இளைஞரின் தாயாரிடத்தில் விசாரித்தனர். அப்போது, அந்த ஏழை தாயார், தன் மகன் ஐ போன் கேட்டு கடந்த 3 நாட்களாக பட்டினி கிடந்ததை காண சகிக்காமல் தான் சேர்த்து வைத்த பணத்தை கொடுத்ததாக வேதனையுடன் கூறினார்.

மேலும் , அங்குள்ள கோவிலுக்கு வெளியே தான் பூ விற்று இந்த பணத்தை சம்பாதித்ததாகவும், தன் மகன் அந்த எந்த வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாகவும் கூறி வருத்தப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, நெட்டிசன்கள் பலவித கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

அதீத அன்பு குழந்தைகளின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமென்றும் எந்த எந்த இடங்களில் பெற்றோர் விட்டு கொடுத்து போக வேண்டுமென்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்றும் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ எவ்வளவு பணக்காரர். அவரே, தனது 11 வயது மகன் செல்போன் கேட்ட போது, வங்கிக் கொடுக்கவில்லை ஒரு தந்தையாக அவர் சரியாக செயல்படுகிறார் என்று மற்றொருவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏழை தாயின் மகனான அந்த இளைஞர் , தன் தாயின் உழைப்பையும் சிந்திய வியர்வை பற்றியும் சிந்தித்து பார்க்காதது தாய்மைக்கு செய்யும் அவமரியாதை என்று மற்றொருவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

பாஜகவிற்கும் திமுகவிற்கும் ரகசிய உறவு : எடப்பாடி குற்றச்சாட்டிற்கு ஸ்டாலின் பதிலடி!

சிறுமிகள்தான் குறி… என்.சி.சி பயிற்றுனரின் வில்லங்கம்… கிறு கிறுத்து போன கிருஷ்ணகிரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share