ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான போட் தற்போது புதிய லூனார் கோமெட் என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
இது கருப்பு, பர்ப்பில், கிரே, க்ரீன் மற்றும் ஆரஞ்சு என கண்ணை கவரும் வண்ணங்களில் கிடைக்கிறது. ப்ளூடூத் இணைப்பு வசதி கொண்ட லூனார் கோமெட் ஸ்மார்ட் வாட்ச், பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் ஆன லுக்கில் உள்ளது.
லூனார் கோமெட் ஸ்மாட்ர் வாட்ச் ஆனது இளைஞர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். 1.39 இன்ச் வட்ட வடிவிலான டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் வாட்சில் 100க்கும் மேற்பட்ட முகப்பு படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதய துடிப்பு, எஸ்.பி.ஓ 2, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மாதவிடாய் சுழற்சி போன்ற உடல் நலன் சார்ந்த செயல்களை துல்லியமான முறையில் காட்டும் அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை பொறுத்தவரை 100க்கும் அதிகமான உடற்பயிற்சி அளவுருக்கள் இடம் பெற்றுள்ளது. எந்த உடற்பயிற்சி செய்தாலும் குறைக்கப்படும் கலோரி அளவை மிகவும் துல்லியமாக காட்டிவிடும்.
லூனார் கோமெட் ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,199 என்ற விலையில் அமேசானில் கிடைக்கிறது. மேலும் போட் நிறுவனத்தில் இணையதளத்திலும் விற்பனையில் உள்ளது.
பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரேலில் போர்… இந்தியா ஆதரவு!
ஜீவாவின் ‘யாத்ரா 2’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!