24 லட்சம் குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய அரிய மனிதர்… இறந்தது எப்படி?

Published On:

| By Kumaresan M

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹாரிசன். ரயில்வே துறையில் கிளெர்க்காக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் இவர் தனது பிளாஸ்மாவை தானமாக வழங்கி வருகிறார்.

ஹாரிசனின் அரிய வகை ரத்தத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-டி அதிகமாக இருந்தது. இவரது பிளாஸ்மாவை பயன்படுத்தி கருவில் உள்ள குழந்தைகளை பாதுகாக்கும் ஊசி மருந்துகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. blood saved over 2.4 million babies

Haemolytic நோய் என்பது கருவில் இருக்கும் குழந்தைகளின் ரத்தத்தில் தாயின் ரத்தக்குழு கலந்து சிவப்பு அணுக்களை அழிப்பதாகும். அதாவது, தாய்க்கும் குழந்தைக்கும் வேறு வேறு ரத்த பிரிவுகள் இருந்தால் இது நடைபெற வாய்ப்பு அதிகம். இதனால், குழந்தைகள் கருவிலேயே அழிந்து விடும்.

இத்தகைய குழந்தைகளை காப்பாற்றவே ஜேம்ஸ் ஹாரிசன் தன் வாழ்நாளில் 1,173 முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இவரது பிளாஸ்மாவை கொண்டு 3 மில்லியன் ஆன்டி பாடி ஊசிகள் தயாரிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. அந்த வகையில், 24 லட்சம் ஆஸ்திரேலிய குழந்தைகளின் உயிரை ஜேம்ஸ் ஹாரிசன் காப்பாற்றியுள்ளார். blood saved over 2.4 million babies

பொதுவாக, 60 வயதுக்கு மேல் ரத்த தானம், பிளாஸ்மா தானம் செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், ஜேம்ஸ் ஹாரிசன் 81 வயது வரை, பிளாஸ்மா தானம் செய்தார் .

இந்த நிலையில், பிப்ரவரி 17 ஆம் தேதி நியூசவுத்வேல்ஸ் நகரிலுள்ள அவரது வீட்டில் தனது 88வது வயதில் ஜேம்ஸ் ஹாரிசன் மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

18 வயதில் முதல்முறையாக பிளாஸ்மா தானத்தை தொடங்கிய ஜேம்ஸ் ஹாரிசன், 81வயதுக்கு பிறகே தானத்தை நிறுத்தினார். இவருக்கு தங்கக் கை கொண்டவர் என்று ஆஸ்திரேலியாவில் செல்லப் பெயர் உண்டு. blood saved over 2.4 million babies

ஹாரிசன் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். தனது தங்கை, மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share