பொட்டு வைக்க மாட்டியா?: பொது இடத்தில் பெண்ணிடம் கத்திய பாஜக எம்.பி.

டிரெண்டிங்

மகளிர் தினத்தையொட்டி நேற்று கோலாரில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற பெண் விற்பனையாளரிடம் நெற்றியில் பொட்டு வைக்கச் சொல்லி பாஜக எம்பி கோபத்தில் கத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மகளிர் தின விழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்களின் கண்காட்சிக்கு நேற்று (மார்ச் 8) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை கோலார் எம்.பியான பாஜகவை சேர்ந்த எஸ். முனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது ஒரு துணி கடையில் இருந்த பெண் விற்பனையாளர் அங்கு வந்த பாஜக எம்.பி.யை முகமலர்ச்சியுடன் வரவேற்றார்.

ஆனால் நெற்றியில் பொட்டு வைக்காத அந்த பெண்ணை பார்த்ததும் கடுப்பானார் எம்.பி முனுசாமி.

பின்னர் கோபத்தில் அவர் அந்த பெண்ணை பார்த்து, ”முதலில் நெற்றியில் பொட்டு வையுங்கள். உங்களின் கணவர் உயிருடன் தானே இருக்கிறார்? இல்லை இறந்துவிட்டாரா? இந்த பொது அறிவு கூட இல்லையா?” என்று அனைவர் முன்னிலையிலும் காட்டமாக கத்தினார்.

இப்படி முகம் சுளிக்கும் வகையில் எம்.பி முனிசாமி அந்த பெண்ணை கடும்கோபத்துடன் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ’இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் உள்ள பல்வேறு தரப்பினரும், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று பாஜக எம்பி முனிசாமியை விமர்சித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? : அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

வட இந்தியர்கள் வருகை- தமிழர்கள் சோம்பேறிகளா? பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்- நிபந்தனைகள் என்ன? பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் சிறப்புப் பேட்டி!

+1
0
+1
0
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.