அரபிக்கடலில் உருவாகியுள்ள அதி தீவிர புயலை அமைதிப்படுத்த குஜராத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடற்கரையில் பூஜை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அதற்கு வங்காள தேச மொழியில் ஆபத்தை குறிக்கும் ’பிபோர்ஜாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிபோர்ஜாய் தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த அதி தீவிர புயல் வரும் ஜூன் 15 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் குஜராத் கடற்கரையை தாக்கும் வாய்ப்பு குறைவு என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடற்கரையில் பூஜை!
இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரத்யுமன்சிங் ஜடே கடற்கரையில் பூஜை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாஜக தலைவரும், அப்தாசா எம்எல்ஏவுமான பிரத்யுமன்சிங் ஜடேஜா, அதி தீவிர புயலாக உருவாகியுள்ள பிபர்ஜோய் புயலை அமைதிப்படுத்தும் நோக்கில் ஜாகாவ் கடற்கரையில் பூஜையை நடத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம், கடவுளை வேண்டுவதன் மூலம் புயலின் தாக்கம் குறையும் என்றும், புயலால் ஏற்படும் சேதம் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சேலத்தில் கலைஞர் சிலை, ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு!
பிரபலங்கள் பேச்சு… அமித்ஷாவின் ரியாக்ஷன்!