கிச்சன் கீர்த்தனா : பாகற்காய்- வேர்க்கடலைக் குழம்பு!
இன்று என்ன குழம்பு வைக்கலாம் என்று நினைப்பவர்களின் குழம்பு குழப்பத்தைப் போக்க சூப்பர் குழம்பு ரெசிப்பி இங்கே உங்களுக்காக… பாகற்காயை விரும்பாதவர்களும் வேர்க்கடலை சேர்த்த இந்த பாகற்காய் – வேர்க்கடலைக் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
பாகற்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 10 பல் (முழுவதுமாகப் போடவும்)
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
தேங்காய் – அரை மூடி (அரைத்து வைக்கவும்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை வேர்க்கடலை – 100 கிராம்
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதில் முழு வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும். வேர்க்கடலையை இத்துடன் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பாதி வேக்காட்டில் பாகற்காயைச் சேர்த்து வேக விட்டு, புளிக்கரைசல் ஊற்றி பச்சை வாசனை போனதும், அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாடு தொக்கு!
கிச்சன் கீர்த்தனா : வெஜ் கோலா உருண்டை!
டிடிஎஃப் வாசனுக்கு வாகனத்துல கண்டம்: அப்டேட் குமாரு
ஆழ்ந்த தியானம்… விவேகானந்தருக்கு மரியாதை செலுத்திய மோடி