பிறப்புச் சான்றிதழ்  2 நிமிடத்தில் எளிமையாக பெறுவது எப்படி ?

டிரெண்டிங்

பிறப்பு , இறப்பு அனைத்து விவரங்களும் இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக பதிவேற்றம் செய்து தங்களுக்கான பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

 பிறப்பு சான்றிதழை ஒரு பைசா செலவில்லாமல் நீங்களே எளிதாக ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க …

சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன.  சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள இணைப்பின் வழியாகவும்,

சென்னை தவிர மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்ய.. பேரூராட்சிகள் இயக்ககத்தின் htpps://www.etwnpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பு பக்கத்திற்கு சென்று திரையில் தோன்றும் பிறப்பு சான்றிதழ் தேடுதல்(Search) என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

பின்னர், பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதலிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து சான்றிதழ் தமிழில் வேண்டும் என்றால் சான்றிதழ் வகை என்பதில் தமிழை கிளிக் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் சான்றிதழ் வகையில் ஆங்கிலம் என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

அனைத்து விவரங்களையும் சரியாகப் பதிவு செய்த பின்னர் Generate என்பதை கிளிக் செய்தால் பிறப்பு சான்றிதழ் விவரங்கள் திரையில் தோன்றும். அடுத்ததாக பிரிண்ட்(PRINT) என்பதை கிளிக் செய்து பிறப்பு சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *