இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆட்டோ ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அவர், பல முக்கியமான நபர்களைச் சந்தித்து வருகிறார்.
இது குறித்த அனுபவங்களையும் அவர் தன் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்தும் வருகிறார். பில்கேட்ஸ் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து அவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோரைச் சந்தித்தார். பிரதமரை சந்தித்த அனுபவங்கள் குறித்தும் இந்தியாவை குறித்தும் அவர் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் பில்கேட்ஸ் சில தினங்களுக்கு முன்பு தனது கல்லூரி நண்பரும் தொழிலதிபருமான ஆனந்த் மகேந்திராவை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் மகேந்திரா குழுமத்தின் வாயிலாகத் தயாரிக்கப்பட்ட மகேந்திரா டிரோ எலக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டினார்.
ஆட்டோ ஓட்டிய வீடியோவை பில்கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ”நான் எலக்ட்ரிக் ஆட்டோவை ஓட்டினேன். இது,131 கிமீ வரை மற்றும் 4 பேர் பயணிக்கும் திறன் கொண்டது. மகேந்திரா போன்ற நிறுவனங்கள் போக்குவரத்துத் துறையில் கார்பனைசேஷன் செய்வதில் பங்களிப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிலதிபரான பில்கேட்ஸ் ஆட்டோ ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல்!
சென்னையில் தனியார் பேருந்துகளா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!