பிக் பாஸ் சீசன் 8 : சவுந்தர்யா vs ஜாக்குலின்… பாடி ஷேமிங் செய்வது நியாயமா?

Published On:

| By christopher

Bigg Boss Tamil Season 8 Day 17

நாள் 17 : நேற்று நடந்த ஸ்டார் ஹோட்டல் டாஸ்கின் தொடர்ச்சியாக, இன்றைய வேக்கப் சாங் ஒலித்து முடித்த உடன் தங்களது ஹோட்டல் நிர்வாக பணிகளுக்கு பெண்கள் தயாராகினர். ‘சாருக்கு சுறுக்குன்னு ஒரு கிளாஸ் சுடு தண்ணி எடுத்துட்டு வா பா’ என ரஞ்சித் கேட்க.., ‘இருங்க பாய், கம்பி எண்ணுவீங்க பாய்’ என்கிற மோடில், ‘எங்களுக்கு சேன்ஸ் வரப்போ உங்களுக்கு இருக்கு..’ என இருந்தனர்.

விமர்சனம் என்றால் இரண்டு பக்கமும் கேட்க வேண்டும். அதனால் கஸ்டமர்ஸ் குறித்த விமர்சனத்தை தற்போது ஹோட்டல் நிர்வாகம் சொல்லலாம் என பிக் பாஸ் அறிவித்தார். அதில், ‘கஸ்டமர்ஸ் எங்களுக்கு கோ ஆப்ரேட் செய்யவில்லை’, ‘இது போன்ற கஸ்டமர்களை எந்த ஹோட்டலிலும் அனுமதிக்க மாட்டாங்க’ என பல்வேறு விமர்சனங்கள் ஹோட்டல் நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் அணியால் வைக்கப்பட்டது.

அதையடுத்து , ‘தம்பி அந்த வெங்காயத்த எடுத்து வை டா’ என ஜெஃப்ரியை சாச்சனா சொல்ல.., கடுப்பானார் ஜெஃப்ரி தன்னை பெர்சனலாக அவமதிப்பதாக ஜெஃப்ரி ரியாக்ட் செய்ததில் சிறு நியாயம் உள்ளது. இதுகுறித்து பின்னர் ரஞ்சித்திடம் பேசிய சாச்சனா, ‘ரூம் சர்வீஸ பின்ன எப்படி நடத்துவாங்க..?’ என சொன்னது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

இந்த டாஸ்கை ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸும் இவ்வளவு பொதுபுத்தி பார்வையுடன் அணுகுவது, அதுவும் பல பேர் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அணுகுவது எந்த வகையில் சரியான உதாரணமாக இருக்க முடியும்..? கிராமத்துக்காரன் என்றால் கைநாட்டு தான் வைக்கத் தெரியணும் என நடித்த சத்யா உட்பட பலரின் ஸ்ட்ரியோடிபிக்கல் அணுகுமுறை நமக்கு உறுத்தலாகவே தெரிந்தது. நிச்சயம் இதை இந்த வீக் எண்டில் விசே கேட்டாக வேண்டும்.

ஒருவழியாக இந்த டாஸ்கில் ஆண்கள் அணியை நிர்வாகமாகவும், பெண்கள் அணியை கஸ்டமராகவும் மாற்றினார் பிக் பாஸ். இதில், பெண்கள் அணிக்கு தனித் தனி கதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்டன. பெரிய நடிகை என்று தன்னைத் தானே நினைத்துக்கொள்ளும் ஒரு ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு தர்ஷாவைத் தேர்ந்தெடுத்தனர். அவரைத் தவிர வேறு யார் அதை கச்சிதமாக செய்துவிட முடியும்..? சினிமாவில் கூட அவருக்கு இதுபோன்ற கச்சிதமான கதாபாத்திரம் கிடைப்பது கடினம்.

ஆக, ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆண்களை ஸ்வீட் ரிவெஞ்ச் செய்யக் கிளம்பினர். போட்ட திட்டத்தின் படியே அதை அறங்கேற்றவும் செய்தனர். மேலாளரான முத்துக்குமரன் பதவி மாற்றம் செய்யப்பட்டார்.

பெண்கள் ஏற்ற கதாபாத்திரங்களில் ‘சூப்பர் மாடல்’ என்கிற பாத்திரத்தை சவுந்தர்யா ஏற்றிருந்தார். அந்த வார்த்தை கொண்ட கதாபாத்திரத்தை ஏற்றால் கூட எரிச்சல் ஏற்றும் தன்மை தானாகவே வந்துவிடும் போலும். டாஸ்கிற்காக பேசுகிறேன் என, ‘இவ்வளவு உப்பு சப்பிட்டா நான் மாடலா இருக்க முடியாது, ஜாக்குலின் மாதிரி ஆகிருவேன்’ என சவுந்தர்யா சொன்னது ஜாக்குலினை காயப்படுத்தியது.

‘இனிமே அப்படி பாடி ஷேமிங் பண்ணாத ..’ என ஜாக்குலின் சொல்ல, ‘நான் பண்ணா மட்டும் தான் குத்தமா..’ என வழக்கம் போல் சவுந்தர்யா சொல்ல இருவருக்கும் இடையே முட்டிக்கொண்டது. ஆனால் இந்த சண்டை பெரிதாக வெடிக்கவில்லை. அதற்குள் பிக் பாஸ் நோ நாமினேஷனுக்கான அடுத்த டாஸ்கை கொடுத்து விட்டார்.

இந்த முறை பிக் பாஸ் டீம் மிகப் புதுமையாக யோசித்து, தேடிப் பிடித்து அளித்த டாஸ்க் ‘டம்ஸ்டராக்ட்’. இந்த டாஸ்கில் 7 படங்களையும் கண்டுபிடித்தனர் பெண்கள் அணியினர். ஆண்கள் அணியில் ரஞ்சித், சாச்சனாவால் 2 பாயிண்ட்கள் பறிபோக, அவர்களால் 5 மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. ஆக, நாளை நடக்கவிருக்கும் மூன்றாவதாக வழங்கப்படும் டாஸ்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணிக்கே நோ நாமினேஷன் பாஸ். மேலும், அதற்குள் இந்த ஹோட்டல் டாஸ்கை கொஞ்சம் நிறைவு செய்தாலும் நன்றே.

ஏனெனில் அது அவ்வளவு பெரிய சுவாரஸ்யம் அளிக்கவும் இல்லை, பிக் பாஸ் எதிர்பார்த்தது போல் வீட்டுக்குள் சண்டைகளும் வெடிக்கவில்லை. ஆனால், இந்த டாஸ்கில் பெண்கள் அணியை விட அதிக டிப்ஸை ஆண்கள் பெற வேண்டும் என முத்துக்குமரன் திட்டம், போட்டு விஷாலை வைத்து ஒரு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்த, பெண்களும் தங்களின் டிப்ஸை வாரி இறைத்தனர்.

இப்படியாக நிறைவானது இன்றைய எபிசோட்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆசிரியர் தாக்கியதில் ஐசியூ-வில் உள்ள ஒன்பது வயது மாணவி!

டாப் 10 நியூஸ் : கரையை கடக்கும் டாணா புயல் முதல் INDvsNZ 2வது டெஸ்ட் போட்டி வரை!

கிச்சன் கீர்த்தனா : கம்பு அவல் மிக்சர்

4 மாநிலங்கள்… 29 செல்போன் டவர் கொள்ளையர்கள்… தமிழ்நாடு போலீஸின் ‘பான் இந்தியா’ ஆபரேஷன்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share