பிக் பாஸ் சீசன் 8 : அசிங்கப்பட்ட அர்னவ்… வச்சு செய்த சேதுபதி

Published On:

| By christopher

Bigg Boss Tamil Season 8 Day 14

நாள் 14 : எவிக்‌ஷன் நாளான இன்றைய எபிசோடில் நமது ‘செல்லம்மா’ அர்னவ் எப்படி வெளியேறுவார்? யார் யாரெல்லாம் எப்படி, எப்படி சேவ் செய்யப்படுவார், இந்த வாரம் வீட்டில் நடந்த மித்த பஞ்சாயத்துகளை விசே விசாரிப்பாரா என ஆவலுடன் இருந்தோம். ஆனால், மீண்டும் ஒரு சோற்றுப் பஞ்சாயத்திலேயே ஆரம்பித்தது இன்றைய எபிசோட்.

நேற்று சம்பந்தி பிரச்சனை என்றால், இன்றைக்கு பாயாசப் பிரச்சனை. வீக் எண்ட் எபிசோட் என பிக் பாஸ் கொடுத்த பாயாசத்தை பிறருக்கு வேண்டுமா என்று கூட கேட்காமல் சாப்பிட்டுள்ளார் சவுந்தர்யா. அது குறித்து பெண்கள் அணியைச் சேர்ந்த மற்ற நபர்கள் பேசிக்கொள்ளும் காட்சியைப் பார்க்க முடிந்தது.

அதிலும் சுனிதா, ‘ஏம்மா நேற்று தானமா ஒரு சம்பந்தி பஞ்சாயத்து போயிருக்கு. அதுக்குள்ள ஒரு பாயாசப் பஞ்சாயத்தா? ‘ என சவுந்தர்யாவிடமே கேட்டு விட்டார்.

எந்த வித சம்பிரதாய பாவனைகளும் இல்லாது வழக்கம் போல் எண்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, ‘நீ தான் தைரியாமான ஆளாச்சே கேளு’ என ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸிடமும் வீட்டில் உள்ள எவரிடமேனும் அவரவருக்கு தோணும் ஒரு கேள்வியைக் கேட்க சொல்ல, ‘நான் நிஜமாவே பாய்ஸ் டீம் மெண்டல் டார்ச்சர் கொடுத்தாங்கன்னு சொன்னேனாமா..?’ என தர்ஷாவிடம் அர்ணவ் கேட்டார்.

அதற்கு, ‘என்ன பொறுத்தவரைக்கும் அப்படி தான் தோணுச்சு என தர்ஷா சொல்ல’, சேது சும்மாவே செய்வாரு, இப்படி அசால்ட்டா பதில் சொன்னா ‘அசால்ட்’ சேதுவாவே செய்வாரே…! என நமக்கு தோன்றியது. அதே போல், ‘இங்க பாரு மா… சொன்னாரா இல்லையாங்கிறது தான் கேள்வி… அதை மட்டும் சொல்லு’ என நறுக்கென கேட்டு இன்றைய நாளுக்கான முதல் வறுவலைத் தொடங்கினார்.

‘உனக்கு சமைக்க தெரியுமா..? ‘ என தர்ஷாவிடம் கேட்ட விஷாலிடம் ‘ஏம்பா பச்சை வாசம் போக இஞ்சி பூண்டு சேர்க்கனும்ன்னு சொன்ன ஆளு தான நீ’ என பாரபச்சமின்றி செய்த ரோஸ்ட்டையும் பார்க்க முடிந்தது.

அதைத் தொடர்ந்து ‘முத்துக்குமரன் மனசாட்சியுடன் விளையாடவில்லை’ என பெண்கள் அணியில் இருந்து அளித்த குற்றச்சாட்டிற்கு ‘கேம் குள்ள என்ன மனசாட்சி எல்லாம்..? நீங்க தொடர்ந்து ரூல் பிரேக் பண்ணுவீங்க, உங்களுக்கு பனிஷ்மெண்ட்டும் தரக் கூடாதா..?’ என ஜாக்குலினிடம் சராமாரியாக கேள்வி கேட்ட சேதுபதி, நாமினேஷனை வீட்டுக்குள் டிஸ்கஸ் செய்த முத்துக்குமரனை ஏன் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை என்பது புரியவில்லை.

இதைத் தொடர்ந்து, இந்த வார கேப்டனான சத்யாவின் கேப்டன்சி குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டபோது, சுமாரான கேப்டன் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருந்ததாக பார்க்க முடிந்தது. ஆனால், ஒரு கேப்டனாக நடுநிலையான முடிவெடுக்கும் இடத்தை தவற விட்டார் என ஆனந்தி சொன்ன கருத்தை ஆமோதித்தார் விஜய் சேதுபதி.

இன்னேரம் நமது ஆண்டவராக இருந்தால், ‘ஒரு தலைவன் நடுநிலையாக இருக்கக் கூடாது, ஆனால் மய்யத்தில் இருந்து தான் முடிவெடுக்க வேண்டும்’ என சொல்லி மக்களை பார்த்து போஸ் கொடுக்கும் காட்சியை நாம் பார்த்திருக்கக் கூடும்.

இந்த வாரம் டாஸ்க்காக வழங்கப்பட்ட பிக் பாஸ் விருதுகளை அவரவர் டீமுக்கே கொடுக்கச் சொன்னார் சேது. பெண்கள் அணியில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நபருக்கு அந்த விருதுகளைக் கொடுக்க, ஆண்கள் அணியில் மொத்த பேரும் நமது ’செல்லம்மா’அர்னவுக்கே அத்தனை விருதையும் கொடுத்தனர்.

‘இது குறித்து எப்படி ஃபீல் பண்றீங்க அர்னவ்..?’ என சேது கேட்ர்க, ‘ரொம்ப பெருமையா இருக்கு’ என அர்னவ் சொல்ல, ‘இதுல என்ன பெருமை..? உங்களுக்கு சான்ஸ் தரும்போது ஏன் எதுவும் பண்ணல..?’ என கேட்டார் விஜய் சேதுபதி. ஏம்பா நாமினேஷன தான் ஒன்னா பண்றீங்கன்னு பார்த்தா இதுல கூட அத்தனை பேரும் ஒரே ஒருத்தர சொல்றீங்களே டா..? பச்சையா தெரியுது டா இது குரூபிசம்ன்னு என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. அதையும் தவறாது சுட்டிக்காட்டவும் செய்தார் விசே.

அடுத்ததாக நாமினேஷனில் உள்ளவர்களை சேவ் செய்யத் தொடங்கினார் சேது. அதில், அவர் பயன்படுத்திய யுக்தி மிகவும் ரசிக்க வைத்தது. ஏனெனில், சென்ற வாரம் தனக்கு முன் சவுந்தர்யா சேவ் செய்யப்பட்டதால் தான் இந்த வாரம் முழுக்க முத்துக்குமரனின் டார்கெட்டாக சவுந்தர்யா இருந்தார்.

ஆனால், இந்த வாரம் கடைசியாக சேவ் செய்யப்பட்டவரே முத்துக்குமரன் தான். இந்த முறை ஓட்டுக் கணக்கை வைத்து செய்யப்பட்டது இல்லை. முத்துக்குமரனின் கணக்கை பொய்யாக்க செய்யப்பட்ட ட்ரிக்காகவே தெரிந்தது. நாம் தொடர்ந்து சொல்லி வருவது போல் இந்த சீசனின் ஆட்டத்தை மாற்றும் ஒரே கேடலிஸ்ட், விஜய் சேதுபதி தான்.

இனி முத்துக்குமரனின் கேம் யுக்தி மாற வாய்ப்புண்டு. சரி அனைவரும் எதிர்பார்த்த ‘செல்லம்மா’ அர்னவின் கண்டெண்டுக்கு வருவோம். வீட்டை விட்டு வெளியேறும் முன் தனது டிராபியை ஆதங்கத்துடன் உடைக்க.., அது உடைக்கப்பட்ட கல்லில் ‘அர்னவ்’ என சாச்சனா எழுத…, மறுபக்கம் அன்ஷிதா அழுக.., வெளியே வந்தார் அர்னவ்.

அதுவரை ‘முடிச்சிவீட்டிங் போங்க’ என்கிற மோடுக்கு போவார் என நினைத்த அனைவரிடத்திலும் ‘இருங்க பாய்’ என தனது உண்மையான வன்மமுகத்தை காட்டினார் அர்னவ்.

அது மாஸ் என அவரே நினைத்துக் கொண்டார் போலும், ஆனால் நமக்கு எரிச்சல் தான் வந்தது. அனைத்தையும் விட, ‘டேய் ஜால்ராஸ்’ என மரியாதையின்றி ஆண்கள் அணியை பேசியதை ‘இப்படி பேசுறது தப்பு அர்னவ். இப்படி பேசுறதா இருந்தா உள்ள இருக்குறப்போ பேசனும் அர்னவ்’ என விசே சுட்டிக்காட்டியதும் சிறப்பு. ஏறத்தாழ அர்னவ், உள்ளே கஷ்டப்பட்டு சம்பாதிக்க நினைத்த நல்லவன் பிம்பத்தை அவரே உடைத்துக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த எவிக்‌ஷனுக்கு பிறகு வீட்டுக்குள் பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. குறிப்பாக, ‘அர்னவ் எவ்வளவு வலிய பார்த்தவன் தெரியுமா..?’ என பரிதாபப்பட்ட அன்ஷிதா, சவுந்தர்யா – ஜாக்குலின் இடையே ஆன மனஸ்தாபம், அர்னவை நம்மைப் போலவே கலாய்த்த ஆண்கள் அணி, தர்ஷா குப்தாவிற்கு 2345ஆவது முறையாக அட்வைஸ் செய்த விஷால் என பல்வேறு காட்சிகளையும் பார்க்க முடிந்தது. இந்த வாரத்திலாவது ஆண்கள் அணி சுயமாக சிந்திக்குமா..? ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுமா..? என காத்திருந்து பார்ப்போம்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்: பிரதமர் அளித்த பதில்!

ஆரியம் ஏன் இன்று “தமிழ் வேண்டும், திராவிடம் வேண்டாம்” என்று சொல்கிறது?

டாப் 10 நியூஸ் : உருவாகும் புதிய காற்றழுத்தம் முதல் கங்குவா 2வது சிங்கிள் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ராகி சீவல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share