விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஏழாவது சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல் ஒரே கிச்சன் என்பதுதான் பிக் பாஸின் ரூல்.
ok
தற்போது பிக் பாஸ் 7வது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். பிக் பாஸ் 7வது சீசனின் தொடக்க விழாவை கமலஹாசன் தொகுத்து வழங்க ஒவ்வொரு போட்டியாளராக வீட்டுக்குள் சென்றனர்.
முதலில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் கூல் சுரேஷ். அவர் உள்ளே நுழைந்தவுடன் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்து வருபவரை கூல் சுரேஷ் கன்வின்ஸ் செய்து கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அடுத்து வருபவருக்கு இந்த கேப்டன் பதவி போய்விடும் என்ற கண்டிஷன் போடப்பட்டது. அதன் பிறகு அடுத்து வீட்டுக்குள் நுழைந்த பூர்ணிமா ரவியை கூல் சுரேஷால் கன்வின்ஸ் செய்ய முடியவில்லை. அதனால் கேப்டன் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது.
கூல் சுரேஷ் போலவே பூர்ணிமா ரவியினால் அடுத்து வீட்டிற்குள் நுழைந்த ரவீனா தாஹாவை கன்வின்ஸ் செய்ய முடியாததால் பதவி கைமாறியது. அதன் பிறகு பிரதீப் ஆண்டனி வீட்டிற்குள் நுழைய ரவீனாவால் பிரதீப்பை கன்வின்ஸ் செய்ய முடியாமல் பிரதீப்பிற்கு கேப்டன் பதவி கிடைத்தது. பிரதீப்பிற்கு அடுத்து உள்ளே நுழைந்த பாடகர் நிக்ஸன் பிரதீப்பிடம் கேப்டன் பதவியை கேட்க “உனக்கு ஏன் கேப்டன் பதவி வேண்டும்?” என்று பதிலுக்கு பிரதீப் நிக்ஸனிடம் கேட்க காரசாரமாக பேச்சுவார்த்தை வளர தொடங்கியது. இறுதியாக “நீ பயப்படுகிறாய் அதனால் இந்த பதவியை நான் உனக்கு தருகிறேன்” என்று பிரதீப் நிக்ஸனை சீண்டும் வகையில் பேச, நிக்ஸன் “எனக்கு கேப்டன் பதிவு வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.
k
அதன் பிறகு ஒவ்வொருத்தராக கைமாறிய கேப்டன் பதவி விஷ்ணுவுக்கு வந்தது. விஷ்ணுவுக்கு அடுத்து வீட்டிற்குள் வந்த யுகேந்திரனை விஷ்ணு கன்வின்ஸ் செய்ய முயன்றார். ஆனால் யுகேந்திரன் கன்வின்ஸ் ஆகாமல் விஷ்ணுவிடமிருந்து கேப்டன் பதவியை தட்டிப் பறித்து விட்டார்.
அதன் பிறகு வீட்டிற்குள் நுழைந்த நடிகை விசித்திராவும், எழுத்தாளர் பவா செல்லதுரையும் தங்களுக்கு கேப்டன் பதவி வேண்டாம் என சொல்ல யுகேந்திரனிடமே கேப்டன் பதவி இருந்தது.
அடுத்ததாக அனன்யா வீட்டிற்குள் நுழைந்ததும், யுகேந்திரன் மீது கடுப்பில் இருந்த விஷ்ணு கேப்டன் பதவி பற்றி யுகேந்திரனிடம் பேசுமாறு அனன்யாவை தூண்டி விட, மீண்டும் காரசாரமான விவாதம் தொடங்கியது ஒருபுறம் அனன்யாவுக்கு ஆதரவாக விஷ்ணுவும் மற்றொருபுறம் யுகேந்திரனுக்கு ஆதரவாக பிரதீப் ஆண்டனியும் மாறி மாறி இடையில் பேச களைகட்ட தொடங்கியது பிக் பாஸ்.
அதன் பிறகு அனன்யாவை கன்வின்ஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததால் கேப்டன் பதவி அனன்யாவுக்கும் இல்லாமல் யுகேந்திரனுக்கும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி போட்டியாளராக நுழைந்த விஜய் வர்மாவிற்கு கேப்டன் பதவி சென்றது. இறுதியாக பிக் பாஸ் 7வது சீசனின் முதல் வாரத்தின் வீட்டின் கேப்டனாக விஜய் வர்மா நீடிப்பார்.
நிகழ்ச்சியின் தொடக்க நாளிலேயே கேப்டன் பதவியை வைத்து போட்டியாளர்களுக்கு மத்தியில் கலகத்தை தொடங்கிவிட்டார் பிக் பாஸ். இனி அடுத்த 100 நாட்களுக்கு யார் யார் என்னென்ன பிரச்சனைகளை கிளப்ப போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இது ஒரு உலகம்… அது ஒரு உலகம்: அப்டேட் குமாரு
5 மதுவிலக்கு போலீசாருக்கு விருது!