பிக் பாஸ் சீசன் 8 : அர்ணவ் செய்த துரோகம்!

Published On:

| By christopher

நாள் 12 : 

பெண்களுக்கு கிடைத்த நாமினேஷன் ஃப்ரீ பாஸ், முத்துக்குமரனின் அசத்தலான நியாபக சக்தி, பெண்கள் அணியில் உருவாகி இருக்கும் டீம் ஸ்பிரிட், சில ஹவுஸ்மேட்ஸின் பலமான நகர்வுகள் என கொஞ்சம் சுவாரஸ்யமாகவே அமைந்தது இன்றைய எபிசோட். இதில், மிக்‌சர் சாப்பிடும் அருண், போலிப் போர்வையில் இருக்கும் அர்ணவ், மங்கிப் போன சாச்சனா, ஆட்டமே புரியாத தர்ஷா போன்றோரின் மோசமான ஆட்டத்தையும் விமர்சிக்க வேண்டியுள்ளது.

இன்றைய முதல் டாஸ்காக அறிவிக்கப்பட்டது ‘பிக் பாஸ் விருதுகள்’. ஒவ்வொரு சீசனிலும் தொன்றுதொட்டு வழங்கப்படும் இந்த டாஸ்கில் கொடுக்கப்பட வேண்டிய விருதுகள் ‘டம்மி பாவா’, ‘குரூப்புல டூப்பு’, ‘ஆடியன்ஸ் வாட்சிங் ஆடியன்ஸ்’, ‘சொம்பு தூக்கி’ . இந்த விருதுகளுக்கு பொறுத்தமான நபர்களை பெண்கள் அணி ஆண்களுக்கு, ஆண்கள் அணி பெண்களுக்கும் தர வேண்டும்.

மேலே கண்ட அனைத்து விருதுக்கும் பொறுத்தமான ஒரு ஹவுஸ்மேட் ஆண்கள் அணியில் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா…? அவருக்கென அளவெடுத்து கொடுக்கும் பட்டங்களாக இது உள்ளது தானே…? ஆம், அவரே தான் இந்த சீசனின் ‘டைட்டில் வின்னர் ‘ அருண். இதை ஒப்புக்கொள்வீர்களானால் நீயும் என் நண்பனே.

சரி, ஆண்கள் அணி இந்த விருதை யாருக்கு தரலாம் எனக் கலந்தாலோசிக்கும் போது ஊருக்கு முதலாக ‘சொம்பு தூக்கி’ என்கிற விருதை அன்ஷிதாவிற்கு தரலாம் என நமது ‘செல்லம்மா’ அர்ணவ் முன்மொழிந்த காட்சிகளை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால், அந்த விருதை அர்ணவே அன்ஷிதாவிற்கு வழங்கியது அன்ஷிதாவிற்கு மனகசப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், அர்ணவ் – அன்ஷிதா இடையே இருந்த நட்பு, அதனால் வந்த சர்ச்சை அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட அர்ணவே தனக்கு இப்படி ஒரு விருதைத் தந்துவிட்டார் என்பது அன்ஷிதாவின் கவலை. ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்து அன்ஷிதாவை வீட்டை விட்டு துரத்தும் வேலைகளை தான் அர்ணவ் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை ஒரே வீட்டில் இவரும் அன்ஷிதாவும் இருப்பது மக்கள் மத்தியில் இவரின் இமேஜை கெடுப்பதாக அவர் எண்ணியிருக்கக் கூடும். ஆனால், எல்லாம் செய்து விட்டு ‘இது டீம் எடுத்த முடிவு’ என ஒரு நடிப்பை போட்டார் பாருங்க.., அதற்கு விசே நாளை தக்க வறுவல் தருவாராக.

இதில், மிக முக்கியமான மூவாக பார்க்க வேண்டியது முத்துக்குமரன் ஜாக்குலினுக்கு தந்த ‘டம்மி பாவா’ விருது தான். அவரது ஸ்ட்ராடஜியே ஜாக்குலினை எமோஷனலாக வீக் ஆக்க வேண்டும் என்பது தான். அதைத் தான் இந்த வாரம் முழுக்க முயற்சி செய்தார். அவரை வீக்கான போட்டியாளர் என சொல்லி டைரக்ட் நாமினேஷன் செய்தது தொடர்ந்து, இன்றைய டாஸ்கில் அவரது மூவ் வரை. ஆனால், இதே ஸ்ட்ராடஜியை பெண்கள் அணியினர் ரிவீட்டாக முத்துக்குமரனுக்கு அளித்ததும் ஒரு வித ஸ்வீட் ரிவெஞ்ச். நமது ’டைட்டில் வின்னர்’ அருணுக்கு ’சொம்பு தூக்கி’ என்கிற விருதை கொடுத்ததை மென்மையாக கண்டிக்கிறேன்.

இதைத் தொடர்ந்து, நாமினேஷன் ஃப்ரீ பாஸுக்கான கடைசி டாஸ்க் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக மூளையை வைத்து ஆட வேண்டிய அந்த டாஸ்க்குக்கு எதற்காக ஆண்கள் அணியில் இருந்து தர்ஷா குப்தாவை அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், முத்துக்குமரனின் அசாதாரணமான நியாபக சக்தியால் வெற்றி வாய்ப்பை ஒரு புள்ளி வரை நெருங்கி தோல்வியை சந்தித்தது ஆண்கள் அணி. வெற்றி பெற்ற பெண்கள் அணியினரிடையில் யாருக்கு இந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸை தரலாம் என்கிற டிஸ்கசனில் ஒரு மனதாக ஜாக்குலினை பெண்கள் அணி தேர்ந்தெடுத்தது. பெண்கள் அணிக்காக அவர் அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு அந்த பாஸ் வழங்கப்பட்டது.

இதற்கு பிறகு கட் செய்தால் ஒரு பெரிய அலறல் சப்தம் கேட்டது. கதறி அழுதுக்கொண்டிருந்தார் சாச்சனா. தனக்கு வீட்டில் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனப் புலம்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு ரீஎண்ட்ரி கொடுத்தபோது மாஸாக பேசிய சாச்சனாவா இது? இன்னொரு பக்கம் ‘புஜ்ஜி பாபு ரொம்ப நல்லவர் தெரியுமா..?’ என்கிற ரேஞ்சிற்கு ‘பாய்ஸ் டீம் என்ன நல்லா பார்த்துக்குறாங்க’ என மீண்டும் ஒரு முறை இன்னா டீம் இன்ன மேட்சுன்னே தெரியாத ஒரு பதிவை வீட்டில் உதிர்த்தார் தர்ஷா குப்தா.

அடுத்ததாக இந்த வாரத்தில் சிறப்பாக விளையாடிய பிளேயர் யார்? மோசமாக விளையாண்ட பிளேயர் யார் என்பதை ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும் என அறிவித்தார் பிக் பாஸ். இதில், ஆண்கள் அணியில் ரஞ்சித், பெண்கள் அணியில் தர்ஷிகா என தேர்ந்தெடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். மோசமாக விளையாடிய பிளேயர்ஸாக அர்ணவ் – சாச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆக, அறிவிப்பு வரும் வரை இவர்கள் இருவரும் கயிற்றால் கட்டப்பட வேண்டும் என ஆணையிட்டார் பிக் பாஸ்.

இந்த டாஸ்க் முடிந்ததும், ‘அப்போ நான் நல்லா விளையாடலையா..?’ என ஆனந்தியிடம் கேட்டார் பவித்ரா. உண்மையில் இந்த வாரம் பெண்கள் அணிக்கு அதிகம் பங்களித்த முக்கியமான நபர் பவித்ரா. கேப்டன்சி டாஸ்க் தொட்டு பல டாஸ்க்களில். ஆக, அவரது கோபம் நியாயமானதே. அதை ஆனந்தியும் தர்ஷிகாவும் சரியாக புரிந்துகொண்டு அணுகியது மிகச் சரியாக இருந்தது. குறிப்பாக, ‘அவ இப்போ எமோஷனலா இருக்கா. நம்மல நியாயப்படுத்த வேண்டாம். அப்புறமா புரியவைக்கலாம்’ என ஆனந்தி சொன்னது முதிர்ச்சியின் வெளிப்பாடு.

ஆக, பெண்கள் அணியில் லேசாக ஒற்றுமை வலுப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. எபிசோட் நிறைவாகும் போது, ‘யாருமே எனக்கு சான்ஸ் தரல. பிச்சை எடுக்குற மாதிரி இருக்கு’ என சவுந்தர்யா புலம்பியதையும், பின்னர் வழக்கம் போல் ஜாக்குலினிடம் அழுததையும் காண முடிந்தது. வீட்டில் மிக்சர் சாப்பிட்டு கொண்டிருந்தாலும் அவருக்கு வாக்குகள் பெரும்வாரியாக வருவது தான் நமக்கு கிடைக்கும் தகவல்களாக உள்ளது. இந்த விந்தை எப்படி என்பதை அவரின் பி.ஆர் டீம் மட்டுமே அறிந்த ரகசியம்.

ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் ஆட்டத்திற்கான புரிதல் லேசாக வந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், அடுத்தகட்டத்திற்கு ஆட்டத்தை கொண்டு போக சில சுவாரஸ்யமற்ற செட் பிராபர்ட்டிகளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டிய வேலை உள்ளது, சில வறுவல்களுக்கான தேவையும் உள்ளது. நாளை வீக் எண்ட் எபிசோடில் விசே எந்த மாதிரியான வறுவல்களை நமக்கு படைப்பார் என்கிற எதிர்பார்ப்புடன் அடியேன் விடைபெறுகிறேன்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ஆளுநருக்கு எதிராக போராட்டம் முதல் 14 மாவட்டங்களில் கனமழை வரை!

கிச்சன் கீர்த்தனா : மாப்பிள்ளை சம்பா அதிரசம்

“தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு வரவேற்பு” – ஆளுநர் ரவி

மகாதேவ் தமன்னா மகாபாவம்பா … அஸ்சாமில் கோவிலில் வழிபட்டது ஏன்?

ஒரே தொழிற்சாலையில் 1 கோடி ப்ரெஸ்ஸா கார் உற்பத்தி … மாருதி சுசூகி சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel