Bigg Boss Season 8: is Ravinder evicted?

பிக் பாஸ் சீசன் 8 : வெளியேறுகிறாரா ரவீந்தர்?

சினிமா டிரெண்டிங்

விஜய் சேதுபதி ஹோஸ்ட்டாக பார்க்கும் முதல் வீக்கண்ட் எபிசோட் என்கிற ஒற்றை ஆர்வம் தான் இந்த எபிசோடின் மொத்த ஆர்வமாக பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது.

கம்ஃபோர்ட் தேடும் ஹவுஸ்மேட்ஸ், கண்டெண்ட் இல்லாத ஒரே சீசன் என இந்த சீசன் குறித்து பார்வையாளர்களின் விமர்சனங்களை வி.சேவும் அறிந்திருக்கிறார் என்று அவரது ஹோஸ்டிங் முறையில் தெரிந்தது. தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் மக்களை பார்த்து கைதட்டல் கேட்காத, எந்த வித ஹோஸ்டிங் சம்பிரதாயங்களும் இல்லாத எதார்த்தமான ஒரு வீக் எண்ட் எபிசோடை நாம் முதன் முறையாக பார்ப்பதாக அமைந்தது இன்றைய எபிசோட்.

ஒவ்வொரு பிரச்சனைகளை அதனின் ரிஷி மூலம் வரை ஆராய்ந்து கேள்வி கேட்ட வி.சேவின் அணுகுமுறை நிச்சயம் இந்த நிகழ்ச்சிக்கு அவசியமான ஒன்றே. ஒவ்வொருவரிடமும் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு அவர்களை திணறடிப்பது, போலி வேஷங்கள் போடும் ஹவுஸ்மேட்ஸை நோஸ் கட் செய்வது என ரோஸ்ட் மோடில் இறங்கினார் வி.சே. ”பிக் பாஸ் வீட்டில் கண்டெண்ட் தந்து , உங்களின் தனி ஆட்டம் ஆடவே வந்துள்ளீர்கள். இங்கு ஒன்னும் செய்யாமல் வெறுமென தங்கிச் செல்ல வரவில்லை” என வி.சே குறிப்பிட்டது ரசிகர்களின் ஆதங்கமும் கூட.

வீட்டைப் பற்றியான ஹவுஸ்மேட்ஸின் புரிதல், பெண்கள் அணி தவறவிட்ட அட்வாண்டேஜ்கள் போன்ற விஷயங்கள் குறித்து பேசிய வி.சே, ஹவுஸ்மேட்ஸின் புரிதல்களை உரையாடல் மூலம் வெளிக்கொண்டு வந்தார்.

‘நீ ஓவர் கான்ஃபிடெண்ட்டா இருக்க!’ என சாச்சனாவிடம் செய்த அட்வைஸாக இருக்கட்டும், ‘நீங்க பேசுறதை கொஞ்சம் ரத்ன சுருக்கமா புரிய வைங்க’ என முத்துக்குமரனுக்கு சொன்ன அட்வைஸ், ‘நீ பேசுறதை விட கொஞ்சம் கேக்குற பழக்கத்த வளர்த்துக்கோ’ என ஜெஃப்ரிக்கு சொன்ன அட்வைஸ், ‘உங்களோட ஆழமான புரிதல கேம்ல யூஸ் பண்ணுங்க’ என ஆர்.ஜே. ஆனந்திக்கு சொன்ன அட்வைஸ் என சில அட்வைஸ் வழங்கும் மொமெண்ட்களில் பல தக்லைஃப் மொமெண்ட்களையும் பார்க்க முடிந்தது.

குறிப்பாக, ‘எனக்கு சாச்சனாவ வெளிய அனுப்புனது கஷ்டமா இருந்துச்சுன்னு அப்போவே பதிவு பண்ணேன்’ என அர்ணவ் பேச ஆரம்பிக்க ‘ அதை இப்போ இங்கையும் பதிவு பண்ணிட்டீங்க…’ என வி.சே கொடுத்த தக் லைஃப் மொமெண்ட்டில் ஆட்டத்தை ஒரு தொகுப்பாளராக அவர் கவனித்த விதம் தெரிந்தது.

‘நான் கண்டஸ்டெண்ட் இல்ல சார்…, என்ன கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணாதீங்க…’ , ‘வீட்டுக்குள்ள போயும் ரெவ்யூ பண்றீங்களா…’என கேட்கும் மொமெண்ட்களில் ரவீந்தரை ரோஸ்ட் செய்த விதம், ‘டீம்ல யாருமே விட்டுக்கொடுக்கலன்னு சொல்றீங்களே..? நீங்க எப்போ விட்டுக்கொடுத்தீங்க..?’ என தர்ஷா குப்தாவை கேட்ட மொமெண்ட் என ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸின் ஆட்டம் சார்ந்த தார்மீக கேள்விகளை கேட்கும் தருணங்கள் சிறப்பு.

அது ஒவ்வொருவரின் ஆட்டத்தையும் இனி வரும் வாரங்களில் சிறப்பிக்க பயன்படும் (அவர்களும் சற்று மனது வைத்தால்). இந்த வாரத்தின் முக்கிய பிரச்சனையாக இருந்தது ரவீந்தர் – ரஞ்சித் செய்த பிராங்க்.

இந்த பிராங்கின் நோக்கம் ரஞ்சித்தை எவிக்‌ஷனில் இருந்து காப்பாற்றுவது தான் என்பதை ரவீந்தர் யாரிடமும் சொல்லவில்லை . குறிப்பாக ரஞ்சித்திடமே சொல்லவில்லை என்பதே இதுவரை ஹவுஸ்மேட்ஸ் மத்தியிலும், ஏன் பார்க்கும் பல ரசிகர்கள் மத்தியிலும் பார்வையாக இருந்தது.

ஆனால், பார்வையாளர்கள் பார்க்காத வெட்டப்பட்ட காட்சிகளில் இந்த பிராங்க் எவிக்‌ஷனுக்காக தான் பண்ணப்போகிறோம் என அனைவர் முன்னிலையில் தான் சொல்லியுள்ளார் ரவீந்தர். ’அடப் பாவிங்களா..? அப்போ பிராங்க்ல நடிச்சதை தாண்டி பிராங்க் முடிஞ்சி தான் பயங்கரமா நடிச்சிருக்கீங்க…’ என பார்க்கும் ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அது.

இதில் ஆச்சர்யமே என்னவென்றால், இப்படி ஒரு கருத்தை ரவீந்தரையே நம்பவைத்துள்ளனர் பிற ஆண்கள் அணியினர். ஆனால், இதை குறும்படம் போட்டு காமிக்காமல் விஷயத்தை மட்டும் சொன்னார் விஜய்சேதுபதி.

இந்த வாரம் முழுக்க பெண்கள் அணியிடத்து ஒற்றுமையின்மையும், ஆண்கள் அணி முழுக்க ஒத்த கருத்தையும் பார்க்க முடிந்தது. ஆனால், ஆண்கள் அணியிடத்து பெரிய தனித்துவம் இருந்ததாக தெரியவில்லை. இதை மிகச் சரியாக சுட்டிக்காட்டிய வி.சே, ”ஆண்கள் அணி ஒற்றுமையில் இருக்கும் தனித்துவத்தையும், பெண்கள் அணி தனித்துவத்தில் இருக்கும் ஒற்றுமையையும் தேடிக்கொள்ள வேண்டும்” என அடித்த பஞ்ச் நச். ஆனால், ரவீந்தர் குறித்து பேசிய ஆர்.ஜே.ஆனந்தி வாய் தவறி , ‘அவர் பிராங்க் செய்யும் போது ஆக்டிவாக இருந்தார். ஆனால், மித்த நேரங்களில் எங்களிடத்து வேலை வாங்கினார்..!’ என கூறியது ரவீந்தரின் மனதை புன்படுத்திய காட்சிகளை பார்க்க முடிந்தது.

ஆனந்தியின் எண்ணம் அவரை புன்படுத்துவது இல்லை என்றாலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியது, இருவரையும் வெகுவாக பாதித்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

தான் தெரியாமல் சொன்ன ஒரு வார்த்தையின் தாக்கத்தால் குற்ற உணர்ச்சியில் ஆனந்தி அழுக.., மறுபக்கம் ‘ எனக்கு யாரும் சாப்பாடு தராதீங்க! இனி யாரும் எனக்கு எதுவும் தர வேண்டாம்’ என குழந்தை போல் ரவீந்தர் கோபித்துக் கொள்ள, ‘ஓரளவுக்கு தான் எல்லாம் . உங்க உடம்ப பின்ன யார் பார்க்குறது? ஒழுங்கா சாப்டுங்க’ என முத்துக்குமரன் அரட்டலுடன் காட்டிய அக்கறை காட்சியுடன் எபிசோட் நிறைவானது.

ஆனால், சோசியல் மீடியா, பிற சோர்ஸ்களிடம் கேட்டவரை, இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது ரவீந்தர் தான் என தகவல் கிடைத்துள்ளது. ’எப்பா.., வீட்டுல கண்டெண்ட் தரும் ஒரே ஆளையும் தூக்கிட்டா, மிஞ்சி இருக்குற விஜய் டிவி பிராடக்ட்ஸ் வெச்சி எப்படிப்பா ஷோ ஓடும்..?’என பிக் பாஸ் ரசிகர்களின் குமுறல்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா காலமானார்!

முன்னாள் அமைச்சர் சுட்டுக்கொலை… தலைவர்கள் கண்டனம் : மகாராஷ்டிராவில் பதற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *