ஹெல்த் டிப்ஸ்: கடைகளில் ‘மில்க் ஷேக்’ குடிப்பது நல்லதா?

Published On:

| By Selvam

மில்க் ஷேக்… கோடை தொடங்கியதும் டிரெண்டிங்கில் வந்துவிட்டது. குடிப்பதற்கும் நல்ல உணர்வையும், நாக்குக்கு சுவையையும் தருகிறது. ஆனால், மில்க் ஷேக் ஆரோக்கியமானதா என்று கேட்டால் யோசித்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

ஏனெனில், பெரும்பாலும் கடைகளில் காய்ச்சாத பாலை அப்படியே பச்சையாக மில்க் ஷேக்குக்கு பயன்படுத்துகிறார்கள். பாலைக் காய்ச்சி, ஆற வைத்து, பின்பு குளிர்ந்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும். தொற்று அபாயம் உள்ள பச்சைப்பாலில் பழம், ஐஸ்கட்டியுடன் ஒன்றாக அடித்துக் கொடுக்கிறார்கள். எனவே, முடிந்தவரை வெளியிடங்களில் மில்க் ஷேக்கை தவிர்ப்பதே நல்லது. முடிந்தால் வீட்டிலேயே தயார் செய்து பருகுங்கள்.

ஆரஞ்சு, பழைய மாம்பழம், சாத்துக்குடி போன்ற புளிப்பு வகைப் பழங்களோடு பாலைச் சேர்க்கக் கூடாது. திரிந்து போய்விடும். கொய்யா, ஆப்பிள், ஃப்ரெஷ் மாம்பழம், சீத்தாப்பழம் போன்ற பழங்களை மில்க் ஷேக்குக்கு பயன்படுத்தலாம்.

பழங்களில் இருக்கும் இயற்கையான இனிப்புச்சுவையே போதுமானது. முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதே நல்லது. இல்லாவிட்டால் மிகவும் குறைவான அளவு சேர்த்துக் கொள்ளலாம். செரிமான சக்தி குறைந்தவர்கள் மில்க் ஷேக்கை தவிர்க்க வேண்டும். யாருக்கு செரிமான சக்தி நன்றாக இருக்கிறதோ, அவர்களுக்கு மில்க் ஷேக் நல்லது.

நீரிழிவு இல்லாவிட்டால் கரும்பு ஜூஸ் குடிக்கலாம். அதுவும் ஒரு கப் குடித்தால் போதும். முக்கியமாக கரும்பு ஜூஸ் சுகாதாரமான இடத்தில், சுத்தமாகச் செய்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். கரும்பு ஜூஸ் மட்டுமல்ல; ஈ மொய்க்கிற எந்த ஜூஸ் கடைக்கும் போகாதீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு

சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா

கொல்கத்தாவுக்கு காப்பு கட்டியாச்சி : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel