கிச்சன் கீர்த்தனா: வெற்றிலைத் துவையல்!

Published On:

| By Kavi

Betel leaves chutney recipe

வயிற்றில் இருக்கும் வாய்வுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது வெற்றிலை. பொதுவாக படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை தர மாட்டார்கள் என்கிற நிலையில் வெற்றிலைத் துவையல் செய்து கொடுத்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரும். நரம்பு மண்டலத்துக்கு பலம் சேர்க்கும்.

என்ன தேவை?

வெற்றிலை – 10 (காம்பு, நடு நரம்பை நீக்கி நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 4
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டுப் பல் – 3 (பொடியாக நறுக்கவும்)
புளி – கோலிக்குண்டு அளவு
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, வெற்றிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளி, உப்பு சேர்த்துச் சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: விரும்பினால் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் மசாலா பராத்தா

கிச்சன் கீர்த்தனா: கற்பூரவள்ளி சட்னி

டாப் 10 செய்திகள் : மோடி, ஸ்டாலின் கொடி ஏற்றுதல் முதல் தங்கலான் ரிலீஸ் வரை!

ஹெல்த் டிப்ஸ்: புரதச்சத்துக்காக ‘புரோட்டீன் பார்’சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share