கால் ஆணி என்பது பலரையும் பாதிக்கிற ஒரு பிரச்னை. அநேகம் பேர் வாழ்நாளில் ஒன்றிரண்டு முறையாவது இந்தப் பிரச்சினையை அனுபவித்திருப்பார்கள்.
அழுத்தம் அல்லது உராய்வின் காரணமாக பாதத்தின் ஒரு பகுதி மட்டும் அழுத்தமாக, கடினமாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பு இது.
பயப்படக்கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்சினை எல்லாம் இல்லை என்றாலும் அதுகுறித்து கவனிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினை கால் பாதங்களில் மட்டும்தான் வரும் என்றில்லை. கைகளிலும் வரலாம். அழுத்தமும் உராய்வும் அதிகமுள்ள எந்தப் பகுதியிலும் வரலாம். இந்தப் பிரச்சினையை பொதுவாக Corns and Calluses என்று சொல்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
முதலில் குறிப்பிடப்பட்ட கால் ஆணி என்பது கார்ன் வகையில் வரும். இது சிறியதாக ஆனால், ஆழமாக இருக்கும். அதிக வலியைத் தரலாம்.
அடுத்து குறிப்பிட்ட கேலசஸ் என்பது அகலமாக ஆனால், ஆழமில்லாததாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருப்பதால் பாதப் பகுதியில்தான் இந்தப் பிரச்சினை அதிகம் தாக்கும்.
இதற்கான முக்கிய காரணம் நாம் அணிகிற காலணிகள் ரொம்பவும் டைட்டான காலணிகள், ஹீல்ஸ் வைத்த காலணிகள் அணிவதுதான் காரணம்.
காலணிகள் அணியாமல் வெறுங்கால்களில் நடப்பவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். ஷூ அணிகிறபோது விரல்கள் அசைகிற மாதிரி இருக்க வேண்டும். இறுகப் பிடித்து வைத்த மாதிரி இருக்கக் கூடாது. சாக்ஸ் அணியாமல் ஷூ மட்டும் அணிவோருக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.
இப்போதெல்லாம் குஷன் வைத்த இன்சோல் கிடைக்கிறது. ஜெல் போன்ற உணர்வைத் தரும் இவற்றை ஷூக்களின் உள்ளே பொருத்திக்கொள்ளலாம். நீண்ட நேரம் நிற்கும்போது பாதங்களுக்கு நல்ல சப்போர்ட் கொடுப்பவை இவை. அழுத்தம் ஏற்படுவதையும் அதன் விளைவாக கால் ஆணி உருவாவதையும் தடுக்கும்.
முறையான ஷூ அணிவது, ஜிம் வொர்க் அவுட் பண்ணும்போது கைகளில் இப்படி வருவதைத் தடுக்க கிளவுஸ் அணிவது போன்றவற்றைப் பின்பற்றுவதே இவை வராமல் தடுப்பதற்கான வழிகள்.
தொடர்ந்து கால் ஆணி பாதிப்பை ஏற்படுத்தினால் சருமநல மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. உணவுகளை வீணாக்காமல் இருப்பது எப்படி?
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக்காக இரண்டு சூரியன்களை இழந்த ஸ்டாலின்
Premalu: தமிழில் வெளியாகும் ‘பிரேமலு’ ரிலீஸ் தேதி இதுதான்!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியரை மிரட்டும் கல்வித்துறை அதிகாரிகள்?