இன்றைய தலைமுறை தங்களது முகப்பொலிவை (Face Glow) மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான அழகுசாதனப் பொருட்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் சருமத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்களின் கலப்பு எதுவும் இல்லாமல், சில இயற்கைப் பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் ஒன்றைத் தயாரித்து, பார்லர் எஃபெக்ட்டில் வீட்டிலேயே உங்கள் முகத்தை டாலடிக்க வைத்துவிடலாம்.
இதற்கு அதிக மெனக்கெடல் எதுவும் தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சமே.
சந்தனப் பவுடர், முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள் பொடி, வேப்பிலைப் பொடி மற்றும் ஆரஞ்சு பவுடர் ஆகிய ஐந்து பொடி வகைகளை இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு பவுடரைப் பொறுத்தவரையில், ஆரஞ்சுப் பழங்களின் தோலை உலர்த்தி, பவுடராக அரைத்துப் பயன்படுத்தலாம் அல்லது ஆரஞ்சுத் தோல் பவுடர் என்றே கடைகளில் தனியாகக் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்.
மேற்சொன்ன ஐந்து பொருள்களையும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு பவுலில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
பின்னர், இதில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து ஒரு பேக் போல தயாரியுங்கள்.
இந்தப் பேக்கை பிரஷ்ஷை வைத்து கீழிருந்து மேலாக முகத்தில் அப்ளை செய்யவும். செய்து முடித்த பிறகு, ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்.
அதன் பின்னர் முகத்தைக் கழுவிடுங்கள். வாரம் இருமுறை இதைப் போட்டு வர வேண்டும். இதுபோலச் செய்யும்போது உங்களது சருமம் தெளிவாகவும் அழகாகவும் மின்னத் தொடங்கும்.
சிலருக்கு முகப்பருக்கள் வந்து போன பிறகு அந்த இடங்களில் தழும்புகள் இருக்கும். அப்படிப்பட்ட முகப்பருத் தழும்புகளையும் (pimple marks) இந்த ஃபேஸ் பேக் சரி செய்யும்.
குறிப்பாக, வெயிலில் அலைவதால் சிலருக்கு முகம் டல்லாகிவிடும் (Tan). அந்தப் பிரச்சினையை சரிசெய்து முகத்தைப் பளிச்சிட வைக்கும் ஆற்றலும் இந்த ஃபேஸ் பேக்கிற்கு உண்டு. முகத்தில் உண்டாகும் கருந்திட்டுகளையும் இது போக்கிவிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு: தலைக்கு மேலே கடல்.. காலுக்கு கீழே வானம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… ஏர் ஃப்ரையர் சமையல் – நல்லதா? கெட்டதா?