ஹெல்த் டிப்ஸ்: முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்!

டிரெண்டிங்

தலைமுடி உதிர்வு இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை. ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதைச் சரி செய்ய அழகு நிலையங்களில் மசாஜ் அல்லது மருத்துவ சிகிச்சை முறைகளைக் கூட எடுத்துக்கொள்கின்றனர்.

சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், தலைமுடி பராமரிப்பின்மை என ஒவ்வொருவரைப் பொருத்தும் தலைமுடி பிரச்சினைக்கான காரணங்கள் மாறுபடும். இதற்கு ஆரோக்கியமான உணவுகளும் அவசியம்.

துத்தநாகம், வைட்டமின் பி, மெக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்த நட்ஸ் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு வலுவூட்டும்.

சிக்கன், மீன், முட்டை, பருப்பு வகைகள், கீரைகள் உள்ளிட்ட புரோட்டீன் நிறைந்த உணவுகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். வால்நட், கடுகு விதைகள், சியா விதைகள், சோயா பீன்ஸ் உள்ளிட்டவை தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும்.

அவோகேடா, பெர்ரி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களும் கேரட், புரொக்கோலி, கீரைகள் உள்ளிட்ட வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அத்துடன், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் சாறாகவோ அல்லது ஏதோ ஒரு வடிவிலோ உணவில் சேர்த்துக்கொள்ளலாம்; முடி உதிர்வைத் தடுக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை

அப்போ எதுக்கு மலைய விட்டு போனாரு : அப்டேட் குமாரு

பியூட்டி டிப்ஸ்: அழகான மெஹந்தியைப் பெற இதைச் செய்யுங்க!

சம்மர் ஸ்பெஷல் ஹெல்த் டிப்ஸ்: தினமும் இளநீர் பருகுவது ஆபத்தா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *