ஹெல்த் டிப்ஸ்: கை – கால் மூட்டு வலியை விரட்டும் ஸ்பெஷல் உணவுகள் இதோ…

Published On:

| By Minnambalam Desk

Best foods for relieve joint pain

வயதானவர்கள் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் கை, கால் மூட்டு வலியால் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் உணவு முறை மாற்றங்களின் மூலம் வலியை விரட்டலாம். Best foods for relieve joint pain

எலும்புகளை வலிமையாக பராமரிக்க கால்சியம் சத்தும் அவசியம். மேலும், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சளில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேங்காய் பாலில் மஞ்சள் கலந்து தினசரி எடுத்துக் கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.

இதேபோல், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை தினசரி உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மீன், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் காணப்படுகிறது. இதேபோல், திராட்சை, பப்பாளி போன்ற பழங்களில் இருந்து அன்டி இன்ஃப்ளமேட்டரி எளிதாக கிடைத்து விடும். இவை அனைத்தும் கை, கால்கள் மூட்டு வலிகளை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

இதேபோல், பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தவிர நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுமார் 6 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share