சிலருக்கு முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். என்னென்னவோ மருந்துகள் உபயோகித்தும், சிகிச்சைகள் எடுத்தும் பலன் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த உணவுகளைத் தவிருங்கள் என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
பருக்கள் அதிகமுள்ளவர்கள் முதல் வேலையாக பால் பொருட்கள், குளுட்டன் உணவுகள், வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு மாதத்துக்கு முழுமையாகத் தவிர்த்துப் பாருங்கள். குளுட்டன் என்பது ஒருவகையான புரதம். அது கோதுமை, பார்லி, குஸ்குஸ் (Couscous) என்ற தானியம் போன்றவற்றில் அதிகமிருக்கும்.
எனவே காக்ரா, பிஸ்கட் உள்ளிட்ட கோதுமை உணவுகள், பால் சேர்த்த உணவுகள், மால்ட் சேர்த்த பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்க வேண்டும். மில்க் சாலிட் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்தப் பொருளையும் தவிர்க்க வேண்டும். கடலை மிட்டாய் சாப்பிட வேண்டாம். ஆனால், தயிர், மோர் இரண்டையும் தவிர்க்கவே கூடாது.
இந்த உணவுப்பழக்கத்தை ஒரு மாதத்துக்குப் பின்பற்றிப் பாருங்கள். நிச்சயம் உங்கள் சருமத்தில் மாற்றம் தெரியும் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.