முகப்பொலிவு என்பது வெளிப்பூச்சு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சொல்லப்போனால் உள்ளே உட்கொள்ளும் உணவுகளால்தான் உண்மையான, நீடித்த சரும ஆரோக்கியத்தை பெற முடியும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
தினமும் முகத்துக்கு க்ரீம் போடுவதில் செலுத்தும் கவனத்தை, தினமும் காய்கறிகள் சாப்பிடுவதில் செலுத்த வேண்டும். வெயிலில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி, தேன் அல்லது எலும்பிச்சை சாற்றுடன் பால் கலந்து முகத்தில் தடவிக்கொண்டு, 10 நிமிடத்துக்குப் பின் முகம் கழுவலாம். கருமை நீங்கும்.
சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் என்றால் தயிர், பாதாம், வால்நட், சோயா, பட்டாணி, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். Vegan உணவு முறை என்றால் தேங்காய்ப் பால், சோயா பால்; அசைவம் சாப்பிடுபவர்களாக இருப்பின் முட்டை, முட்டையின் கரு, மீன் வகைகள், கடல் மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.
அதே நேரம் எந்த வகை உணவு எடுத்துக்கொள்வோரும், பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். காய்கள் மற்றும் பழங்களில்தான் அதிக அளவு உடல் மற்றும் சருமத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன.
தொடர்ந்து ஜூஸ் குடித்து வருவதால் ஓரிரு மாதங்களில் முகப்பொலிவை பெறலாம். வாழைப்பழத்துடன், வால்நட் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து மில்க் ஷேக் போல் செய்து வாரத்தில் மூன்று நாள்கள் குடித்து வர… சருமத்துக்குப் பொலிவும், கேசத்துக்கு ஊட்டமும் கிடைக்கும். கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உடல் நலனுக்கு மட்டுமல்ல… சரும ஆரோக்கியத்துக்கும்தான்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஏழே நாள்களில் எடையைக் குறைக்க முடியுமா?
டாப் 10 நியூஸ் : தவெக மாநாடு விஜய் அறிவிப்பு முதல் சுப்மன் கில் பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பூப்போன்ற இட்லி செய்யலாம் வாங்க!
இன்னுமாடா இந்த உலகம் உங்கள நம்புது? அப்டேட் குமாரு