சரும ஆரோக்கியம் மேம்பட உதவும் அழகு சாதனப் பொருட்கள் குறித்த விளம்பரங்கள் மற்றும் இன்ஃபுளூயன்ஸர்களின் பரிந்துரைகள் சோஷியல் மீடியாவில் அதிக அளவில் வருகின்றன. ஆனால், இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் குறித்தும் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பவை குறித்தும் டெர்மடாலஜிஸ்ட்ஸ் பகிரும் அலர்ட்கள் இங்கே…
“ஜேட் ரோலர் (Jade Roller), குவா ஷா ஸ்டோன் (Gua Sha Stone) போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி, தளர்ந்த முகத் தசைகளை இறுக்கமாக்க விரும்பும் போக்குகள், சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாகப் பெருகி வருகிறது. ஆனால், அதில் உண்மை கிடையாது. Benefits of Jade Roller
இவை ஆர்கானிக் தயாரிப்பாக புரமோட் செய்யப்படுவதோடு, பார்ப்பதற்கும் கண்ணைக் கவரும் வண்ணம் இருப்பதால் இவற்றை வாங்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், இவையெல்லாம் நம் முகத்தை இறுக்கமாக்கி விடாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஏனென்றால், நம்முடைய ஏஜிங் காரணமாக ஈர்ப்பு விசையானது முகத்தின் அடியில் இருக்கும் கொழுப்பு மற்றும் தசைநார் ஆகியவற்றை கீழே பிடித்து இழுக்கும். நீங்கள் இந்த ஜேட் ரோலரை வைத்து முகத்தில் மீண்டும் மீண்டும் ரோல் பண்ணுவதால், முகத்தின் அடியில் இறங்கியிருக்கும் கொழுப்பானது ஈர்ப்பு விசையைத் தாண்டி மீண்டும் மேலே சென்றுவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதே சமயத்தில், இந்த ஜேட் ரோலரை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு பின்னர் இதனை முகத்தில் சற்று ரோல் செய்தால் முகத்திற்கு குளுமை கிடைக்கும்… அவ்வளவே.
அதைவிட்டுவிட்டு, இந்த ரோலரை வைத்து முகத்தில் தேய்த்துக்கொண்டே இருந்தால் உராய்வு காரணமாக கருந்திட்டுகள் வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்று எச்சரிக்கிறார்கள்.