சருமம் முழுவதையும் மிருதுவாக பிரஷ் செய்து பிறகு குளிக்கும் முறையை ‘டிரை பிரஷ்ஷிங்’ (Dry Brushing) என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள். Benefits of Dry Brushing
“கடைகளில் பிரத்யோகமாக விற்கப்படும் இந்த வகை பிரஷ்களின் மூலம் தேய்த்துக் குளிப்பதால், சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்படும். அதனால் அந்த இடத்தில் புதிய செல்கள் வேகமாக உருவாவதுடன், சருமம் பொலிவடையும்; மிருதுவாகும்” என்று அறிவுறுத்துகிறார்கள். Benefits of Dry Brushing
மேலும், “சருமத்தின் மேற்பரப்பில் சிறு சிறு நுண்ணிய துவாரங்கள் காணப்படும். அவை பாக்டீரியா தொற்றுகளால் அடைக்கப்பட்டிருந்தால், டிரை பிரஷ்ஷிங் செய்யும்போது அந்த அடைப்பு நீங்கிவிடும். அதன் காரணமாக, சருமம் தேவையான ஊட்டச்சத்தை சரியாக உட்கிரகித்து, ஆரோக்கியமாக மாறும்.
சருமத்தின் மீது அழுத்தம் கொடுத்து தேய்க்கும்போது அடிப்பகுதியிலுள்ள நரம்புகள் அனைத்தும் அழுத்தமாகி, நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று, ரத்த ஓட்டம் சீராகும். அன்றைய தினத்தை புத்துணர்வுடன் கழிக்க இது பெரிய அளவில் உதவும்.
குறிப்பாக, சருமத்தில் சேரும் கொழுப்பினால், தொடை இடுக்குகளில் தடிப்பு போல ஏற்படும். இது சருமத்தில் அதிகமாகச் சேர்ந்தால், ஒவ்வாமை ஏற்பட்டு, கட்டிகளாக மாற வாய்ப்பிருக்கிறது.
டிரை பிரஷ்ஷிங் செய்வதால், தடுப்பு உருவாவது தடுக்கப்படுவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் வரும்முன் தடுக்கலாம்” என்றும் அறிவுறுத்துகிறார்கள்.