உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும் தன்மை பீட்ரூட்டுக்கு உண்டு. ஆனால், இதன் நிறத்துக்காகவே ஒதுக்குபவர்கள் பலருண்டு. அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிட இந்த பீட்ரூட் குச்சி சிப்ஸ் செய்து வீட்டிலுள்ள அனைவரையும் அசத்தலாம்.
என்ன தேவை?
பீட்ரூட் – 200 கிராம்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
சோள மாவு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் ஒரு தட்டில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் வெட்டிவைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம், பீட்ரூட்டில் உள்ள ஈரப்பதமே போதுமானது. (பீட்ரூட் ஒன்றோடு ஒன்று ஓட்டாத வண்ணம் கலந்துகொள்ளவும்) பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி பீட்ரூட்டைப் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : முட்டைகோஸ் பகோடா
கிச்சன் கீர்த்தனா : இந்தியன் ஸ்டைல் பாஸ்தா