தினமும் குளிப்பது போல, பல் துலக்குவது போல சருமத்துக்கு க்ளென்சிங்கும் தினமும் அவசியம். இதன்மூலம் நம் சருமத்தில் இருக்கும் துவாரங்கள் (Skin pores) அடைபடாமல் இருக்கும். சருமம் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
க்ளென்சிங்கை காலையிலும் செய்யலாம். இரவிலும் மேற்கொள்ளலாம். க்ளென்சரில் உள்ள சோப்பிங் ஏஜென்ட், சருமத்தில் இருக்கும் அழுக்குகள், சருமத்தின் துவாரங்களில் படிந்திருக்கும் எண்ணெய் போன்றவற்றை வெளியில் கொண்டு வர தேவைப்படுகிறது.
இது முழுக்க முழுக்க ரசாயனம் என்றும் சொல்லிவிட முடியாது. கற்றாழை, வெள்ளரி போன்ற இயற்கையான தாவரங்களின் உட்பொருளையும் கலந்திருப்பார்கள். மூலிகைகளின் சாறு கலக்கும்போது அந்த க்ளென்சர் சருமத்துக்கு இன்னும் இதமானதாகவும், எரிச்சல் போன்ற பக்கவிளைவுகளைத் தராத பாதுகாப்பு கொண்டதாகவும் மாறும். தற்போது இதுபோன்ற மூலிகை சாரங்கள் சேர்க்கப்பட்ட க்ளென்சர்கள் பரவலாகக் கிடைக்கின்றன.
“வறண்ட சருமம் கொண்டவர்கள் க்ரீம் தன்மை கொண்ட க்ளென்சர் உபயோகிக்கலாம். அதில் கொஞ்சம் கொழுப்புச்சத்து இருப்பதால், க்ளென்சிங்கினால் சருமம் வறண்டு போகாமல் தவிர்க்க முடியும்.
எண்ணெய்த்தன்மை கொண்ட சருமம் கொண்டவர்கள் `ஃபோமிங் க்ளென்சர்’ (Foaming Cleanser) பயன்படுத்தலாம். இதில் நிறைய நுரை வரும். அந்த நுரையினால் மசாஜ் செய்து, பிறகு சுத்தம் செய்யும்போது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய்ப்பசை வெளியே வந்துவிடும்.
இயல்பான சருமம் கொண்டவர்கள், க்ளென்சிங் மில்க் அல்லது க்ளென்சிங் லோஷன் பயன்படுத்தலாம். இதுபோல் உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து, அதற்கேற்ற க்ளென்சரை தேர்ந்தெடுத் தால் நீங்கள் எதிர்பார்க்கிற பலனைப் பெற முடியும்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அமித் ஷாவுக்கு எதிராக தொடரும் போராட்டம் முதல் கிறிஸ்துமஸ் விழாவில் மோடி வரை!