பியூட்டி டிப்ஸ்: பற்களைப் பளிச்சிட வைப்பது… டூத் பேஸ்ட்டா, பல் பொடியா?

Published On:

| By Selvam

பற்கள் பளிச்சென்று இருக்க டூத் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா அல்லது பல் பொடி பயன்படுத்துவது சரியா, இதைக் கொண்டு விரல்களால் பல் துலக்குவது சரியா… எது பெஸ்ட்? பல் மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் இதோ…

“பற்களைச் சுத்தப்படுத்த டூத் பேஸ்ட்தான் சிறந்தது என்பதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

பல் பொடி என்பது தூளாக இருப்பதால், அதில் பற்களை, எனாமலை பாதிக்கும் சொரசொரப்புத் தன்மையை ஏற்படுத்தும் ஏஜென்ட்டுகள் அதிகம் இருக்கக்கூடும். தொடர்ந்து பல் பொடியை உபயோகித்து, பல் துலக்குபவர்களுக்கு, பற்கள் சீக்கிரமே தேய்ந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

டூத் பேஸ்ட் என்பது சொரசொரப்புத்தன்மை அற்றதாக இருப்பதால், அதை உபயோகிப்பதுதான் பற்களுக்குப் பாதுகாப்பானது. பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும்.

சரியான டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி, பல் துலக்கும்போது, பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கு, உணவுத்துகள்கள் போன்றவை எல்லாம் வெளியேறும். அதுவே விரல்களால் பல் தேய்த்தால், உங்களால் மேலோட்டமாக மட்டும்தான் தேய்க்க முடியும். விரல்களை பல் இடுக்குகளுக்குக் கொண்டு போக முடியாது.

பற்கள் முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டால்தான் வாய் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், சொத்தைப் பற்கள், பல் தொடர்பான பிற பாதிப்புகள் ஏற்படலாம்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: இஞ்சிப் பச்சடி

டாப் 10 நியூஸ்: மன்மோகன் சிங் மறைவு முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share