avoid gaining weight after marriage

பியூட்டி டிப்ஸ்: திருமணத்துக்குப் பின் எடை அதிகரிக்காமல் இருக்க…

டிரெண்டிங்

avoid gaining weight after marriage

மார்கழி முடிந்து தை பிறந்ததும் நிறைய முகூர்த்த நாட்கள் வரிசை கட்டி நிற்கின்றன. திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் அழகு, ஆரோக்கியம் என அனைத்திலும் கவனம் செலுத்தியாக வேண்டும்.

திருமணத்துக்கு முன்பு பார்த்துப் பார்த்துத் தோற்றத்தை மெருகேற்றும் மணப்பெண், திருமணத்துக்குப்பின் அப்படியே மாறிவிடுவார். புகுந்த வீட்டு உணவு, உறவினர்கள் அளிக்கும் விருந்து, மகிழ்ச்சி, பூரிப்பு என ஒரு சுற்று எடை கூடி விடுவார்.

இந்த நிலையில் புது மணமகளாக இருக்கும் பெண்களுக்காகத் திருமணத்துக்குப் பின்  கடைப்பிடிக்க வேண்டிய டயட் இதோ…

திருமணத்துக்குப் பின் தொடர் விருந்து போன்ற நிகழ்வுகளால் அதிக இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படும்.

அதிலும் அசைவம் விருந்துகளால் எடை சரசரவென அதிகரிக்க வாய்ப்புள்ளது. சாப்பிடும் அளவில் கவனமாக இருக்கவும். சுவையாக இருக்கிறது, வற்புறுத்தினார்கள் என்பதற்காகக் கூடுதலாகச் சாப்பிடுவதைக் கட்டாயமாகத் தவிர்த்துவிடவும்.

நீங்கள் விருந்துக்குச் செல்லும் இடங்களில் உறவினர்களிடம் நட்பாகப் பேசி அவர்களுக்கும் உங்கள் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை உணர வையுங்கள். ஏனெனில் எடையைக் குறைப்பதைக்காட்டிலும், எடைகூடாமல் இருக்கச் செய்யும் முயற்சிகள் எளிதானதுதான்.

கணவன் – மனைவி இருவருமாகத் தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி அல்லது ஏதாவது ஓர் உடற்பயிற்சியைப் பழக்கப்படுத்துங்கள். உடல் கட்டுக்கோப்பாக இருப்பதுடன் உங்கள் இருவருக்குமான புரிதலுக்கும் இது உதவும்.

விருந்து சாப்பிடப்போகும் அன்று காலை வேளையில் பருப்புடன் கலந்த காய்கறி சூப் அருந்துங்கள். மிதமாகச் சாப்பிடுங்கள்.

அதேபோல் விருந்தன்று இரவிலும் பழங்கள் மட்டும் போதும். பயறு சுண்டல் எடுத்துக் கொள்ளலாம். இதை எப்போதும் கடைப்பிடித்தால் எடைகூட வாய்ப்பில்லை.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் போன்றவை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.

இரவில் அதிக நேரம் கழித்து அதிக அளவு உணவு உண்பதையும் உடனே படுத்து உறங்குவதையும் தவிர்க்கவும்.

சரியான வேளைக்குச் சாப்பிடுவதோடு, தேவையற்ற நேரத்தில் நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் அவ்வளவு அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மட்டன் முருங்கைக்கீரைச் சாறு

avoid gaining weight after marriage

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *