ஒரு கட்டடத்துக்கு அஸ்திவாரமாகிய ஃபவுண்டேஷன் எந்தளவு முக்கியமோ, அதேபோல் மேக்கப்புக்கும் ஃபவுண்டேஷன் அவசியம். ஃபவுண்டேஷன் இல்லாமல் மேக்கப் செய்தால் அது முழுமையான மேக்கப்பாக இருக்காது.
முகத்தில் ஒரே மாதிரியான நிறத்தைக் கொடுப்பதற்காகவே ஃபவுண்டேஷன் முக்கியமாகப் பயன்படுத்துகிறோம். முகத்தில் கண்கள், உதடுகள் தவிர்த்து மீதமுள்ள இடங்கள் முழுவதும் ஒரே மாதிரியாக, ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஃபவுண்டேஷன்.
“ஃபவுண்டேஷனிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. இதில் லிக்விட், க்ரீம், பவுடர், கேக் என பலவிதமான ஃபவுண்டேஷன்கள் இருக்கின்றன. சில ஃபவுண்டேஷன்கள் மாய்ச்சரைஸிங் தன்மையுடனும், சிலவற்றில் சன் ஸ்க்ரீன் கலந்தும் இருக்கும். க்ரீம் வகையிலும் இருக்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை ஃபவுண்டேஷன் போட்டுக் கொள்ளலாம். நார்மல் ஸ்கின் கொண்டவர்களுக்கு லிக்விட் ஃபவுண்டேஷன் சரியாக இருக்கும். எண்ணெய் வடியும் சருமம் கொண்டவர்களாக இருந்தால் கேக், பவுடர் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.
ஃபவுண்டேஷனை தினமும் உபயோகிக்கலாம். சிலர் ஏதேனும் விசேஷங்களுக்குச் செல்லும்போது மட்டும் போட்டுக் கொள்வார்கள். எது எப்படி இருந்தாலும் இரவு தூங்கச் செல்லும் முன்பு ஃபவுண்டேஷனை கலைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சரும துவாரங்கள் அடைத்துக் கொள்ளும்.
எனவே, சரும வெடிப்பு, முகப்பரு போன்ற தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க, அதை முறைப்படி அகற்ற வேண்டியது அவசியம்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : திமுக தலைமை செயற்குழு கூட்டம் முதல் தேசிய கணித தினம் வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… கருவாடு பிரியரா நீங்கள்? ஒரு நிமிஷம்!