முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களுக்கும், கூந்தலை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கும் பேன்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தலைமுடிகளில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை சேர்ந்தால் கட்டாயமாக பேன் பரவும். நமது முடிகளில் அழுக்கு சேரச் சேர அந்த இடம் பேன்கள் வசிக்க ஏற்ற இடமாக மிகவும் வசதியாக பேன்களுக்கு அமைந்துவிடுகிறது.
வயிற்றில் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களால் முடிகளுக்கு பாதிப்பு வந்தால், அதற்கான முறையான மருத்துவத்தை எடுத்து பிரச்சினையை சரி செய்யலாம்.
ஆலிவ் ஆயிலை முடிகளில் படுமாறு தடவி, காற்றுபுகா வண்ணம் பாத் கேப் (Bath cap) கொண்டு கவர் செய்தால், முடியை விடாமல் இறுகப் பற்றி, ஒட்டியிருக்கும் முட்டைகளின் பிடிமானத்தை ஆலிவ் ஆயில் தளர்த்தி வெளியே கொண்டு வரும்.
எலுமிச்சைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து, பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப்பில் கவர் செய்துவிட்டால், அதன் வாடை தாங்காமல், முடியினை அலசும்போது பேன்கள் தானாகவே வெளியேறும்.
துளசி இலைப் பொடி, மருதாணி பூவின் பொடி, வசம்பு பொடி, வேப்பம்பூ பொடி, வேப்பங்கொட்டைப் பொடி, சீத்தாபழக் கொட்டை பொடி இவற்றில் ஏதாவது ஒன்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடிகளில் தடவி வெளியேற்றலாம்.
அதேபோல் வெள்ளை மிளகுடன் பால், காட்டு சீரகத்துடன் பால் இவற்றில் எளிதாய் கிடைக்கும் ஒன்றைத் தலையில் தடவி பாத் கேப் பயன்படுத்தி கவர் செய்து, ஒரு மணி நேரத்தில் அலசி சுத்தம் செய்து பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
கூந்தல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் மட்டும் போதாது, சுத்தமாகவும் இருக்க வேண்டும். பேன் தொல்லை அதிகம் இருப்பவர்கள், மேலே குறிப்பிட்ட இயற்கை முறைகளில் ஏதாவது ஒன்றினை அடிக்கடியும், குறைவாக இருப்பவர்கள் மாதம் இருமுறையும் எடுப்பது நல்லது என்று அழகுக்கலை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்புமணி – முகுந்தன்: இணைந்து கொண்டாடிய பொங்கல்!
ஈரோடு கிழக்கு : பெண் வேட்பாளரை களமிறக்கிய சீமான்… யார் இந்த சீதாலட்சுமி?