‘ஃபுல்லர்ஸ் எர்த்’ என்றழைக்கப்படும் முல்தானி மிட்டி, பலரது விருப்ப தேர்வாக இருக்கிறது. ஆனால், அதை எப்படி, எத்தனை நாள்களுக்கொரு முறை பயன்படுத்த வேண்டும்? சருமத்துக்கு முல்தானி மிட்டி தரும் பலன்கள் என்ன? அதைப் பயன்படுத்துவது சரியானதா? இப்படி பல கேள்விகளும் உள்ளன.
“எண்ணெய் பசை சருமம், முகப்பருவால் பொலிவை இழந்த சருமம், வறண்ட சருமம் என அனைத்து வகையான சருமத்துக்கும் ஏற்றது முல்தானி மெட்டி” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
மேலும், “இதில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளன. சருமத்துக்கு இதை பயன்படுத்துவதால் எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. குறிப்பாக முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை மற்றும் பருக்களை அகற்றவும் செய்கிறது” என்கிறார்கள்.
“முல்தானி மிட்டி என்பது ஒருவகையான களிமண். முகத்திலுள்ள தண்ணீரையும் எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிக்கொண்டு, முகத்தை வறட்சியாக வைப்பதுதான் களிமண்ணின் வேலை.
பருக்கள் இருப்பவர்கள் முல்தானி மிட்டி உபயோகிக்கும்போது, அது பருக்களுக்கு காரணமான எண்ணெய்ப்பசையைக் கட்டுப்படுத்தும். ஆனால் சிலருக்கு பல வருடங்களாக முல்தானி மிட்டி உபயோகித்துப் பழக்கம் இருக்கும். அவர்கள் அதைத் தொடர்வதில் பிரச்னையில்லை. மேற்குறிப்பிட்ட தேவை இருந்தால் உபயோகிக்கலாம்.
முல்தானி மிட்டியை எதற்கு உபயோகிக்கிறோம் என்ற தெளிவுடன் உபயோகிப்பது சிறந்தது. அதை சாதாரண தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவிவிடலாம். மற்றபடி முல்தானி மிட்டியை எலுமிச்சைச் சாற்றுடனோ, பாலாடையுடனோ குழைத்து உபயோகிப்பதைத் தவிர்ப்பதுதான் நல்லது” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: நார்த் இண்டியன் வெஜ் ஆம்லெட்
விக்னேஷ் சிவனின் அடுத்த படம்: ஒருவழியா பூஜை போட்டாச்சு!
டிமான்ட்டி காலனி 2 ட்ரெய்லர் அப்டேட்: தேதி இதோ!