அந்தக் காலத்தில் அம்மாக்களும் பாட்டிகளும் ஃபேஷியல் செய்யாமலேயே அவர்கள் முகம் பொலிவாக, இளமையாக இருந்தது. இன்று மாதந்தோறும் ஃபேஷியல் செய்தாலும் அந்தப் பலன் நீடிப்பதில்லையே… ஃபேஷியல் செய்வது உண்மையிலேயே பலனளிக்குமா?
பலர் சொல்வதுபோல அந்தக் காலத்தில் நம் அம்மாக்கள், பாட்டிகள் யாரும் ஃபேஷியல் செய்ததில்லைதான். அந்தக் காலத்தில் ரசாயனங்கள், கலப்படங்கள் இல்லாத உணவுகள் கிடைத்தன. அவையே அவர்களது ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருந்தன. இந்தக் காலத்துப் பெண்களுக்கு வீட்டு வேலை, வெளி வேலை என ஸ்ட்ரெஸ் அதிகம். அந்தக் காலத்துப் பெண்களுக்கு அது இல்லை. சுற்றுச்சூழல் மாசும் இன்று அதிகரித்திருக்கிறது. ஒருமுறை வெளியில் சென்று விட்டு வந்தாலே நம் சருமத்தில் எவ்வளவு அழுக்கு படிகிறது என்பதைப் பார்க்க முடியும்.
சூரிய ஒளியின் தாக்கமும் கடந்த சில வருடங்களில் பொசுக்கும் அளவுக்கு தீவிரமாகியிருக்கிறது. அதனால் சருமம் சீக்கிரமே கருத்துவிடுகிறது. இப்படிப் பல விஷயங்கள் நம் சரும ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. எனவே, அதற்கேற்ப கூடுதல் அக்கறையும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. அதனால்தான் ஃபேஷியல் போன்ற சிகிச்சைகள் அவசியமாகின்றன.
இதுவரை சருமத்துக்கு எந்தச் சிகிச்சையுமே செய்யாதவர்களுக்குக் கூட ஃபேஷியல் செய்ததும் மிகப்பெரிய மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. வயது குறைந்ததாக உணர்கிறார்கள். ஃபேஷியல் என்பது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இறந்த செல்களை அகற்றி, சருமத்துக்குப் புத்துணர்வு கொடுக்கும். சருமத் தசைகளை டைட் ஆக்கும். அந்த வகையில் ஃபேஷியல் நிச்சயம் பலன் தரக்கூடியதுதான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
4 மாதங்களாகப் பிணவறைக்கு வெளியே எஜமானருக்காக காத்திருக்கும் நாய்!
தலைவன் வடை, தொண்டன் முறுக்கு: அப்டேட் குமாரு
“நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை”: யுவராஜ் சிங்
காசா மீது அணுகுண்டு? இஸ்ரேலிய அமைச்சர் சர்ச்சை!