‘ஆள் பாதி ஆடை பாதி’ என்பதைவிட, இன்று ஒருவர் அணிந்துள்ள ஆடைகளை வைத்துதான் முதல் பார்வையிலேயே அவரைப் பற்றி முடிவு செய்துவிடுகிறது உலகம். மற்றவர்களின் மதிப்பீடுகள் ஒரு பக்கம் இருக்க, பொருத்தமான ஆடைகள் அணிந்திருக்கும்போதுதான், நமக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். அப்படி உடைகளை உடல்வாகுக்கேற்ப தேர்ந்தெடுப்பது எப்படி?
உயரம் குறைவானவர்களுக்கு…
டாப், பாட்டம் என்று மேலிருந்து கீழ் வரை ஒரே நிறத்தில் அணியலாம்.
நீளமான சங்கிலிகள் மற்றும் பிற அக்சஸரீஸ் தவிர்க்கவும்.
முழுக்கை வேண்டாம்… அரைக்கை ஓ.கே!
உயரம் குறைந்து ஒல்லியாக இருப்பவர்களுக்கு பிங்க், சிவப்பு மற்றும் பீச் நிறங்கள் பளிச்சென இருக்கும்.
உயரம் குறைந்து பருமனாக இருப்பவர்கள் கறுப்பு, மெரூன், பச்சை போன்ற அடர் நிறங்களில் உடுத்தலாம்.
ஸ்கர்ட் அணியும் போது ஸ்லீவ்லெஸ் டாப் அணிவது நல்லது.
உயரமாக இருப்பவர்களுக்கு…
பளிச் நிறங்களில் உயரம் குறைவான குர்த்தி, கீழே பட்டியாலா பேன்ட் நல்ல சாய்ஸ்.
ஆடைகளில் குறுக்குக் கோடுகள் (ஹாரிஸான்டல்) இருந்தால் உயரத்தைக் குறைத்துக் காட்டும்.
சுடிதார், குர்த்தி, டி-ஷர்ட், வெஸ்டர்ன் டாப்ஸ் எதிலும் குட்டை கை வேண்டாம். அரைக்கை, முக்கால்கை, முழுக்கை தேர்ந்தெடுக்கவும்.
டாப் ஒரு நிறம், பாட்டம் ஒரு நிறம் என்று அணிந்தால் மிகவும் உயரமாகத் தெரியாது.
மினி ஸ்கர்ட்ஸ், ஷார்ட் பேன்ட்ஸ்… இவை இரண்டும் வேண்டவே வேண்டாம் உங்களுக்கு!
பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு…
ஹாஃப் ஸ்கர்ட் அணியலாம்.
`V’ நெக் டி-ஷர்ட்ஸ், டாப்ஸ் உயரமாகவும், ஒல்லியாகவும் காட்டும்.
மேலிருந்து கீழான கோடுகள் (வெர்டிகல்) கொண்ட ஆடைகள் ஒல்லியாகக் காட்டும்.
காட்டன் தவிர்த்து, வேலைப்பாடுகள் அற்ற பிளெய்ன் ஆடைகள் அணியவும்.
மெல்லிய தேகம் கொண்டவர்களுக்கு…
காட்டன் மற்றும் வேலைப் பாடுகள் அதிகம் கொண்ட ஆடைகள் அணியலாம்.
அளவு சரியாகப் பொருந்தாத ரெடிமேடு ஆடைகள் தவிர்த்து, துணி எடுத்து அளவுகேற்ப தைத்து அணியவும்.
கறுப்பு நிற உடைகள் தவிர்க்கலாம்.
முழுக்கை அல்லது குட்டைக்கை ஆடையின் மீது ஷ்ரக் அணிந்துகொள்ளவும்.
ஒல்லியாக, உயரமாக இருப்பவர்களின் பிரச்சினை, கூன். எந்த உடை அணிந்தாலும் நிற்கும்போதும் நடக்கும்போதும் கூன் போடுவதைத் தவிர்த்தால், உடலமைப்பின் சிறப்பு முழுமையாக வெளிப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ‘புரோட்டீன் பவுடர்’ எல்லாருக்கும் ஏற்றதா?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பதினெட்டாவது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல்! வெல்லட்டும் மக்களாட்சி! வீழட்டும் அதிகாரக் குவிப்பு!