ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் கடந்த ஐந்து வருடத்துக்கு முன்புதான் அறிமுகமானது என்றாலும், இன்றைய டீன் ஏஜ் பெண்களின் ஃபேவரைட்டாக மாறியிருக்கிறது.
அது, முகத்துக்கு நீட் லுக் கொடுப்பதால் பெண்களின் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. “அலுவலகத்துக்கு அவசர அவசரமாகக் கிளம்பும் நேரத்தில், எளிமையாகத் தலைவாரிக்கொள்ள இந்த ஹேர்ஸ்டைல் வசதியாக இருப்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள்” என்று கூறும் அழகுக்கலை நிபுணர்கள், பார்லருக்குப் போக நேரமில்லாதவர்கள், வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எளிதாக செய்யலாம் என்றும் அதற்கான வழிகளையும் பகிர்ந்துகொள்கிறார்கள்
அரை கப் வெதுவெதுப்பான எண்ணெய் மற்றும் அரை கப் கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் கலந்து தலைமுடிக்கு தேய்த்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் கழுவலாம்.
நன்றாக பழுத்த வாழைப்பழங்களுடன் ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் கலந்து பிசைந்து பேஸ்ட் பதத்திற்கு செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் பூசி சிறிது நேரம் கழித்து வாஷ் செய்யலாம்.
முதலில் விளக்கெண்ணெயை சூடாக்கி தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதை சுற்றி சூடான அல்லது ஈரமான துண்டை தலையில் போர்த்தி அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பூ போட்டு வாஷ் செய்யலாம்.
இரண்டு முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி கலந்து உச்சந்தலையில் தடவவும். இதை ஒரு மணிநேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் வாஷ் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க்குகள் அனைத்தும் தலைமுடியை நேராக்கவும், மென்மையாக்கவும் உதவும் என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: குடியரசு தலைவர் தமிழகம் வருகை முதல் உதயநிதி பிறந்தநாள் வரை!
கிச்சன் கீர்த்தனா: இறால் ஸ்ப்ரிங் ரோல்
மன உளைச்சலில் தாம்பரம் ஆயுதப்படை காவலர்கள்: காரணம் என்ன?