குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம், குளிரான வெப்பநிலை மற்றும் குளிர்ந்த காற்றின் காரணமாக கண்கள் வறண்டு போகும். அதோடு குளிரை சமாளிப்பதற்காக நாம் பயன்படுத்தும் ஹீட்டர்களினாலும் கண்களில் பாதிப்பு ஏற்படும். Brighten Up the Tired Eyes
இதனால் கண்கள் சிவத்தல், கண்களில் எரிச்சல், கண்களில் சோர்வு போன்றவை ஏற்படும் என்பதால், குளிர்காலத்தில் கண்களைப் பராமரிப்பது என்பது சவாலான விஷயம்.
இருந்தாலும் சில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை நாமே சரிசெய்ய முடியும் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.
* குளிர்ந்த பாலில், இரண்டு வட்ட வடிவ பஞ்சை நனைத்து, மூடிய கண்கள்மீது வைத்துப் படுத்திருக்கவும். 15 நிமிடங்கள் கழித்துப் பஞ்சை எடுத்துவிடவும்.
தினமும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்துவந்தால் கண்கள் பளிச்சிடும்.
* சிறிய கிண்ணத்தில் குளிர்ந்த நீரை எடுத்துக்கொள்ளவும். இதில் `வைட்டமின் ஈ’ கேப்ஸ்யூலை உடைத்துப் போடவும். பின்னர் அந்தத் தண்ணீரில் இரண்டு துண்டு பஞ்சை நனைத்து மூடிய கண்கள்மீது வைத்திருக்கவும்.
15 நிமிடங்கள் கழித்துப் பஞ்சுத் துண்டுகளை எடுத்துவிடவும். தினசரி இரவு படுக்கும் முன்பு இதைச் செய்துவிட்டுக் கண்களைக் கழுவிவிட்டுப் படுக்கவும்.
தொடர்ந்து செய்து வந்தால் ‘கண்மேல்’ பலன் கிடைக்கும்.
* இரண்டு டீஸ்பூன் தக்காளியின் சதைப்பகுதியை எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் துருவி, அதைப் பிழிந்து ஒரு டீஸ்பூன் சாறு எடுக்கவும்.
இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைத்துக் கண்களைச் சுற்றி கருவளையம் உள்ள பகுதியில் தடவவும்.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். வாரத்தில் மூன்று முறை இதைச் செய்துவந்தால் கருவளையம் நீங்கும். கண்கள் பளிச்சிடும்.
* ஆரஞ்சு சாற்றை ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி எடுத்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டிக் கண்களுக்கு மேல் வைத்து ஒத்தி எடுங்கள். வாரத்தில் மூன்று முறை இது போல ஒத்தடம் கொடுக்கலாம். சோர்வு நீங்கி கண்கள் பளிச்சிடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நிவாரண நிகழ்ச்சியில் செல்ஃபி அலப்பறைகள்: அப்டேட் குமாரு
மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்: வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர் இவர் தான்!
Brighten Up the Tired Eyes