இன்று காஜல் பென்சில், ஐலைனர், மஸ்காரா என்று கண் அலங்காரத்துக்கு எத்தனையோ காஸ்மெட்டிக் பொருள்கள் வந்துவிட்டாலும் நாம் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வரும் கண் மை, அழகுடன் ஆரோக்கியத்துக்கும் உகந்தது. Easy to make eyelash at home
அந்தக் கண் மையை, நம் வீட்டிலேயே எளிமையாக, இயற்கையாகத் தயாரிக்கலாம். கண்ணுக்குக் குளிர்ச்சியையும் அழகையும் தரக்கூடிய கண் மையை எப்படித் தயாரிப்பது என்பது குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் விளக்குகிறார்கள் சித்த மருத்துவர்கள்…
இன்று கண்ணுக்குப் பல காஸ்மெட்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும், பெரும்பாலானவை ரசாயனங்களால் செய்யப்படுபவை.
எனவே, சிலருக்கு அலர்ஜியையும், நீடித்த பயன்பாட்டின்போது சிலருக்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். மாறாக, விளக்கெண்ணெயில் செய்யப்படும் நம் பாரம்பர்ய மை, கண்ணுக்கு மருந்துபோல என்றே சொல்லலாம்.
கண் மை தயாரிக்க தேவையான பொருட்கள்…
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை தேவையான அளவு, பாதாம் பருப்பு ஒன்று, சிறிய அளவில் காடாத் துணி (புதியது, தண்ணீரில் அலசிக் காயவைத்தது), விளக்கெண்ணெய் 50 மி.லி, சிறிய அகல் விளக்குகள் இரண்டு.
எப்படித் தயாரிப்பது?
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையுடன் ஒரு பாதாமைச் சேர்த்து அரைத்து, 50 மி.லி அளவுக்குச் சாறு எடுத்துவைத்துக்கொள்ளவும்.
அந்தச் சாற்றில் காடாத் துணியை நனைத்து, நன்றாகக் காயவைக்கவும். காய்ந்த காடாத் துணியை எடுத்துத் திரிபோலத் திரிக்கவும்.
ஓர் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி, செய்து வைத்துள்ள திரியைப் போட்டு விளக்கேற்றவும். மற்றோர் அகல் விளக்கை, எரிகின்ற தீபச்சுடரில் கவிழ்த்தபடி வைத்து, அதில் தீபத்தின் புகைக்கரியைச் சேகரிக்கவும்.
சேகரித்த கரியை சின்ன ஸ்பூன் கொண்டு எடுத்து, அதனுடன் தேவையான அளவு விளக்கெண்ணெய் கொண்டு குழைத்து எடுக்கவும்.
இதனை வெள்ளி அல்லது செம்புச் சிமிழில் சேர்த்து வைத்துக் கண் மையாகப் பயன்படுத்தலாம்.
இந்தக் கண் மையைத் தொடர்ந்து பயன்படுத்தி வர, மஞ்சள் கரிசலாங்கண்ணியின் மருத்துவ குணத்தால் கண் சார்ந்து வரக்கூடிய நிறைய பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
இந்த மை கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதால் கண் எரிச்சல், தலைவலி போன்றவை தவிர்க்கப்படும்.
பொதுவாக, தலைக்கு விளக்கெண்ணெய் தேய்ப்பதன் மூலம் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும், கேசம் வலுப்படும்.
அதைக் கண் மை தயாரிக்கப் பயன்படுத்தும்போது, கண்ணின் ஆரோக்கியத்துக்குக் கவசமாக இருக்கும்.
வைரஸ் தொற்றினால் ஏற்படுகிற மெட்ராஸ் ஐ போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவும். கண்ணில் பூவிழும் பிரச்சினையையும் தவிர்க்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
ஜல்லிக்கட்டு கல்யாணம்: அப்டேட் குமாரு
Easy to make eyelash at home