அழகாக இருக்கும் நம்மில் 50 சதவிகிதம் பேருக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறது. ஆனால், எதிராளிக்கு வாய் துர்நாற்றப் பிரச்சினை இருப்பது தெரிந்தாலும் அதை அவரிடம் யாரும் சொல்ல மாட்டார்கள். நெருங்கிய நண்பர்கள், பெற்றோர்கூட இதைச் சொல்லத் தயங்குவார்கள்.
இந்த நிலையில் வாய் துர்நாற்றத்தைப் போக்க இன்று மார்க்கெட்டில் ஏராளமான மவுத்வாஷ், பேஸ்ட், ரின்ஸ் என என்னென்னவோ கிடைக்கின்றன. ஆனால், அவையெல்லாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது. முக்கியமாக, வாய் துர்நாற்றத்துக்கான காரணம் தெரியாமல் அதை குணப்படுத்த முடியாது.
”வாடையானது வாயிலிருந்து வருகிறதா, தொண்டையில் இருந்து வருகிறதா அல்லது வேறு எங்கிருந்துமா என்பதை முதலில் அறிய வேண்டும். எனவே இ.என்.டி மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கண்ணாடி முன் நின்று வாயைத் திறந்து உள்ளே ஏதேனும் கட்டிகளோ, சீழோ இருக்கிறதா என்று பாருங்கள்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் தினமும் இரண்டு முறை வாய் கொப்பளித்தாலே இந்தப் பிரச்சினையால் ஏற்படும் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
சைனஸ் பிரச்சினை இருந்தால் தினமும் இருவேளை ஆவி பிடித்தால் வாய் நாற்றம் நீங்கும். பல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் நிச்சயம் வாய் துர்நாற்றம் இருக்கும். தினமும் இருவேளைகள் மென்மையான பிரஷ்ஷால் பல் துலக்க வேண்டும். கூடவே நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கங்களால் வாய் துர்நாற்றம் இருக்கும்.
வாய் துர்நாற்றத்துக்கு இன்ஸ்டன்ட் தீர்வு வேண்டும் என்றால் சாப்பிட்ட உடனேயே சிறிது சீரகம் அல்லது சோம்பு அல்லது கிராம்பு அல்லது ஏலக்காய் மெல்லலாம். நிரந்தர தீர்வுக்கு மருத்துவ ஆலோசனைதான் பெஸ்ட்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!