பியூட்டி டிப்ஸ்: அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்!

Published On:

| By Kavi

சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்துப் பொருட்களில் ஒன்று. அழகு சிகிச்சைகளிலும் முக்கிய பங்காற்றும் தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய எளிமையான அழகுக் குறிப்புகள்  இதோ…

காபித்தூள் – கால் டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், உப்புத் தூள் – கால் டீஸ்பூன்… மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், வெடிப்புகள் குறையும்.

தக்காளி விழுது – இரண்டு டீஸ்பூன், தேன் – ஒரு டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். ஃபேஷியல் செய்தது போன்று முகம் பளபளக்கும்.

தேன் – 2 டீஸ்பூன், பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன், எலுமிச்சைப்பழச் சாறு – கால் டீஸ்பூன், அரிசி மாவு – அரை டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதை அக்குள் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இப்படிச் செய்துவந்தால் அக்குள் பகுதியிலுள்ள கருமை குறையும்.

தேன் – 3 டீஸ்பூன்,முல்தானி மிட்டி – 4 டீஸ்பூன், எலுமிச்சைப்பழச் சாறு – அரை டீஸ்பூன், தயிர் – அரை டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து முழங்கையில் தடவி வந்தால் அந்தப் பகுதியின் கருமை நீங்கும்.

தேன், கடலை மாவு, நெல்லிக்காய்ச் சாறு, எலுமிச்சைப்பழச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலந்து வாரம் ஒருமுறை ஃபேஸ் பேக் போல உபயோகிக்கவும். எண்ணெய்ப் பசை சருமம் பளிச்சிடும்.

தேன் – ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய் பொடி – கால் டீஸ்பூன், எலுமிச்சைப்பழச் சாறு – அரை டீஸ்பூன், சந்தனப் பொடி – அரை டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சிடும்.

2 டீஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து உதடுகளில் தடவி பத்து நிமிடங்களுக்குப் பின் மசாஜ் செய்து காட்டன் துணியால் துடைத்து எடுக்கவும். தொடர்ந்து செய்து வர உதட்டில் ஏற்பட்டுள்ள கருமை நீங்கும்.

அழகுக் குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன் உங்கள் தேன் கலப்படம் அற்றதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். அதில் சில துளிகள் தேனை விடவும். தேன், தண்ணீரில் கரைந்தால் அதில் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அறியலாம்.

சுத்தமான தேன், தண்ணீரில் ஊற்றியதும், கரையாமல் அப்படியே நீரின் அடியில் தங்கிவிடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்… 9 ’மாவட்டங்கள்’ எதிர்ப்பு! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

குளுகுளு சென்னை: அப்டேட் குமாரு

இந்தியா கூட்டணி மீது மம்தாவின் திடீர் பாசம்: காரணம் சொன்ன அதிர் ரஞ்சன்

சிதம்பரம்: அதிமுக-பாமக நிழல் கூட்டணி… தனித்துவிடப்பட்ட பாஜக… திருமாவின் வெற்றி வித்தியாசம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share