மார்ச் மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இப்போதே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. சாலையோரங்களில் திடீர் தர்ப்பூசணி, இளநீர் , வெள்ளரிக்காய், கரும்புச்சாறு கடைகள் இடம் பிடிக்க தொடங்கி விட்டன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் என்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூறு வருடங்களுக்கு பின்னால் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதை அடுத்து இந்த ஆண்டு கோடை கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமெனவும்,
குறிப்பாக அக்னி நட்சத்திர நேரத்தில் வீட்டை விட்டு போதுமானவரை வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து தினசரி கண்காணிப்பை, அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
70வது பிறந்தநாள் : முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து!
சுற்றுலா, டேப்லெட்: ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!