கடந்த சில வருடங்களில் வொர்க் ஃப்ரம் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. ஒரே இடத்தில் பல மணி நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது, கட்டுப்பாடில்லாத உணவுகள், உடற்பயிற்சி இன்மை, அதிக உடல் எடை போன்றவற்றால் இள வயதில் இருப்பவர்களும் முதுகுவலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இவற்றைத் தவிர்க்க, “டூ வீலர் ஓட்டுவோர், வாகனங்களின் அமைப்பு, உட்கார்ந்து ஓட்டும் பொசிஷன் போன்றவற்றை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிக தூரம் வாகனம் ஓட்டுவோர், தினமும் இருவேளைகள் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். எலும்புத் தேய்மானமாகி இருந்தால் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்து அன்றாட செயல்களில் உட்காருவது, நிற்பது, நடப்பது, குனிவது, வேலை செய்வது போன்றவற்றை மேம்படுத்த வாழ்க்கை முறை மாற்றம் செய்யலாம். சங்கடமான மெத்தையில் தூங்குவதும், தவறான அளவிலான தலையணையைப் பயன்படுத்துவதும் முதுகுவலியைத் தூண்டும் என்பதால் அதைத் தவிர்க்கலாம்” என்று கூறும் எலும்பியல் நிபுணர்கள்,
“லேசான முதுகுவலிக்கு ஓய்வு எடுத்தல், ஐஸ் ஒத்தடம் போன்றவை உதவும். சூடான தண்ணீர் பாட்டில் அல்லது ஹீட் பேட்சைப் பயன்படுத்தி முதுகில் சூட்டைப் பயன்படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்கலாம். அப்படியும் முதுகுவலி தொடங்கி நீண்ட நாட்களாக நீங்காமல் இருந்தால் மருத்துவரை அணுகலாம்.
அடுத்து, முதுகுவலியாக தொடங்கி பின்னர் அந்த வலி காலுக்கும் பரவுகிறது, கால் மரத்து போகிறது என்றாலும் முதுகுவலியோடு எடை இழப்பு, பசியின்மை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலையில ஏர் ஷோ, நைட் பீர் ஷோ – அப்டேட் குமாரு
விமான நிகழ்ச்சி: பாதுகாப்பு குளறுபடியால் மக்கள் உயிரிழப்பு… எடப்பாடி கண்டனம்!
பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ரோஸ்மேரி வாட்டர்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?
ஹெல்த் டிப்ஸ்: கர்ப்பப்பையை நீக்கினால் தாம்பத்ய உறவு பாதிக்குமா?