நமது அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத செல்போன்கள், இப்போது டாய்லெட் வரையில் நுழைந்துவிட்டன. உங்களுக்கும் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், நீங்கள் என்னென்ன உடல்நலக் கோளாறுகளை காரணம் தெரியாமல் சந்தித்து வருகிறீர்கள் என்பதை உணருங்கள்.
“பொதுவாக நாம் பயன்படுத்தும் செல்போன்களை எப்போதாவது மட்டுமே துடைத்து சுத்தம் செய்வோம். அதிலும், கிருமி நாசினிகள் போட்டு சுத்தம் செய்ய பலருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இப்படி செல்போன்கள் சுத்தம் செய்யப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவ்வப்போது, உங்களுக்கு காரணம் தெரியாமலேயே பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
அதுவும் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துவோருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படும். ஏனென்றால், டாய்லெட் என்பது பாக்டீரியா மற்றும் கிருமிகளின் இனப்பெருக்க இடமாக இருக்கிறது. இவை எளிதாக ஸ்மார்ட்போன்களின் பேக் கவர்கள், மைக், டிஸ்பிளே மற்றும் ஸ்பீக்கர்களில் பரவக்கூடும்.
இந்த செல்போன் நமது கண், காது, மூக்கு, வாய் உள்ளிட்ட கிருமிகள் எளிதில் தாக்கக்கூடிய இடங்களில் அதிகமாக வைக்கப்படுவதால், நமக்கு நேரடியாக தாக்கம் ஏற்படும். சொல்லப்போனால், செல்போனில் பரவும் கிருமிகள் 28 நாட்கள் வரையில் வீரியம் கொண்டிருக்கும் என்பதே உண்மையாகும்.
இதனால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகள், ஃபுட் பாய்சன், தோல் நோய்கள், சிறுநீரக தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, இரவு நேரங்களில் கிருமிகள் தாக்கம் காரணமாக தலைவலி ஏற்பட்டு தூக்கமின்மை வரலாம். ஆகவே, நவீன உலகின் கொசுக்களான செல்போன்களை டாய்லெட்டில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உதட்டில் வெடிப்பு நீங்க… இந்த ஹோம்மேடு லிப் பாம் உதவும்!
டாப் 10 நியூஸ் : விஜய் கல்வி விருது விழா முதல் மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு வரை!
கிச்சன் கீர்த்தனா : பேரீச்சம்பழம் கேரட் சாலட்
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… அதிமுக – பாமக கூட்டணி! திமுக வைக்கும் திடீர் ட்விஸ்ட்!
உனக்கும் அது தெரிஞ்சு போச்சா? அப்டேட் குமாரு
பயிர் காப்பீடு… விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே முக்கிய கோரிக்கை!