காலை 11 மணி அளவில் டபுள் சர்க்கரை சேர்த்து ஃபுல் டம்ளர் டீ குடித்துவிட்டு, மதியம் ஒரு மணி அளவில் பசி எடுக்கவில்லை என்று புலம்புவது அறியாமை. சர்க்கரை சேர்த்த நொறுவைகளும், பன்னாட்டு குளிர்பானங்களும் இயல்பான செரிமானத்துக்கு நேரடி எதிரிகள். இந்த நிலையில் செரிமானத்தில் சிக்கல் இருப்பவர்கள் டீ, காபிக்கு தடை விதிக்கலாம். avoid tea coffee for digest problems
தாகம் அதிகம் இருக்கிறது எனில் இருக்கவே இருக்கிறது மோர். நலம் கொடுக்கும் கிருமிகளின் கூட்டத்தை செரிமானப் பகுதியில் அதிகரித்து ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் மோருக்கு நிகர் மோரே. அவ்வப்போது மோர்க்குழம்பு தயாரித்து சாப்பிடுவதும் செரிமானத்துக்குச் சிறந்தது.
புளி கரைத்த நீர், ஏலம், சீரகம் சேர்த்து உருவாக்கப்படும் பானகத்தை அவ்வப்போது பருக வயிற்று உப்புசம், வாயு பிரச்னை, மலச்சிக்கல் போன்றவை காணாமல் போகும்.
ஓமம், சோம்பு, சீரகம்… இவற்றில் ஏதாவதொன்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து செரிமான பானமாகப் பருக… செரிமானத்தை மீட்டெடுக்க உதவும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.