சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும் நிலையில் அவரைப்பருப்பு கலந்த சாதம் செய்து சாப்பிடலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
அரிசி – 500 கிராம்
அவரைப்பருப்பு – 200 கிராம்
கடுகு – கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 75 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
நெய் – 10 மில்லி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசியை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு கலவையுடன் ஊற வைத்த அரிசி, அவரைப்பருப்பு, உப்பு சேர்த்து அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்து நன்கு வேகவிடவும். சாதத்தை இறக்கும்முன் நெய் கலந்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வேர்கடலை லட்டு!
கிச்சன் கீர்த்தனா: தட்டைப்பயறு வடை
டிஜிட்டல் திண்ணை: மோடி பிரதமர் ஆக மாட்டார்… ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த பிளான்!
கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!