ஊன்று கோல் உதவியுடன் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த 2 வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களும், அலெக்ஸ் கேரி 11 ரன்களும் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
பின்னர், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது.
இதில், 2ஆம் நாளின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் நாதன் லயானுக்கு வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக வெளியேறினார்.
இதனிடையே நாதன் லியானுக்கு காயம் ஏற்பட்டது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இன்று (ஜூன் 30) நடைபெற்ற 3ஆவது நாள் ஆட்டத்தின் போது நாதன் லியான் களமிறங்கவில்லை. இந்நிலையில் ஊன்று கோல் உதவியுடன் நாதன் லியோன் லார்ட்ஸ் மைதானத்திற்கு வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“ஆளுநர் கடிதத்தை நிராகரிக்கிறோம்” – தங்கம் தென்னரசு
“அரசியலமைப்பு சட்டத்தை ஆளுநர் பின்பற்றவில்லை” – வில்சன் குற்றச்சாட்டு!