நாடாளுமன்றம் என்றாலே விவாதம், கேள்வி பதில், அமளி, வெளிநடப்பு என பரபரப்பாகவே பார்த்திருப்போம். அதற்கு மாறாக நாடாளுமன்ற அலுவல் நடவடிக்கையின் போது காதல் புரோபோசல் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
இந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. புதிய விக்டோரியன் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் எம்.பி. நாதன் லம்பேர்ட். இவர் வனம், எரிசக்தி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் தேதி காலை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பெண் எம்.பி.நோவா எர்லிச்சியை பார்த்து, நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்
என காதலை வெளிப்படுத்தியுள்ளார் நாதன் லம்பேர்ட்.
தனது தொடக்க உரையிலேயே காதலை கூறிய அவர், நாம் திருமணம் செய்து கொள்ளலாம். தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை.
மோதிரம் கொண்டு வர இங்கு அனுமதிக்கவில்லை. மோதிரத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
குழந்தைகள் தூங்க சென்றதும், பின்னிரவில் ரொமாண்டிக்காக கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
நாதன் லம்பேர்ட் பேசியதை கேட்டு அவையில் இருந்த எம்.பி.க்கள் கரவொலி எழுப்பி அவரது காதலை உற்சாகப்படுத்தினர்.
நாடாளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து நாதன் லம்பேர்ட்டின் காதலை நோவா எர்லிச்ம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நாதன் லம்பேர்ட்டை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்ன் தொகுதி எம்.பி.யான நாதன் லம்பேர்ட் தனது காதலை வித்தியாசமாக, சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென நீண்ட காலமாகவே திட்டமிட்டு வந்துள்ளார்,
ஆனால் கொரோனா பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் அது முடியாமல் போனது. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் புரோபோஸ் செய்ய திட்டமிட்டு அவ்வாறே செய்துள்ளார்.
பொதுவாக பள்ளியில், கல்லூரியில், அலுவலகங்களில், பேருந்தில் காதலர்கள் காதலை வெளிப்படுத்தி பார்த்திருப்போம், கேட்டிருப்போம்.
இல்லையெனில் தாங்கள் நேசிப்பவர்களுக்கு பிடித்த இடத்திலோ, கேண்டில் லைட் டின்னர் அல்லது மாலை நேர கடற்கரை போன்ற ஒரு ரம்மியமான சூழலிலோ காதலை வெளிப்படுத்துவார்கள்.
அந்நிகழ்வை தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் வகையில் இடத்தை தேர்வு செய்வார்கள்.
அந்த வகையில் நாதன் லம்பேர்ட் புரொபோஸ் செய்துள்ளார். அவர் புரொபோஸ் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: பாஜகவுக்கு எதிரான குரல்கள்?
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு