நம் உடலுக்குத் தினமும் புரதச்சத்து தேவைப்படுகிறது. இது, ‘ஹை பயலாஜிக்கல் வேல்யூ புரோட்டீன்’ (High biological value protein) உணவுகள் மூலமாக நாம் எடுத்துக்கொள்ளும் அந்த உணவின் அளவுக்கேற்ப நமக்கு முழுமையாகக் கிடைக்கின்றன. அத்தகைய உணவுகளில் முட்டை முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு முட்டையில் 7 கிராம் புரோட்டீன் கிடைக்கிறது. முட்டையைச் சாப்பிடுவதால், அதிலுள்ள புரோட்டீன் அளவு நமக்கு அப்படியே கிடைக்கும்.
இந்த நிலையில் எந்த வயதில், எத்தனை முட்டை சாப்பிடலாம்?
2 – 12 வயது குழந்தைகள்… தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டையைத் தண்ணீரில் வேக வைத்து (அவித்து) அல்லது ஆம்லெட்டாகவும் சாப்பிடலாம்.
12 – 70 வயதுள்ளவர்கள்… தினமும் 1 – 2 முட்டைகள் சாப்பிடலாம். முட்டையைத் தண்ணீரில் வேக வைத்து (அவித்து) அல்லது ஆம்லெட்டாகவும் சாப்பிடலாம்.
70 – 90 வயதினர்… தினமும் ஒரு முழு முட்டையைத் தண்ணீரில் வேக வைத்து (அவித்து) அல்லது ஆம்லெட்டாகவும் சாப்பிடலாம்.
90 வயதுக்கு மேல்… செரிமான பாதிப்பு இல்லாதபட்சத்தில், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அல்லது, வேகவைத்த முட்டையில் (அவித்து) வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். செரிமான பாதிப்பு இருந்தால், 90 வயதுக்கு மேல் முட்டையைத் தவிர்க்கலாம்.
ஜிம் செல்பவர்கள் தினமும் அதிக அளவில் முட்டைகளைச் சாப்பிடுவதுண்டு. இது நல்லதல்ல. தினமும் ஒரு மணி நேரம் ஜிம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அல்லது சைக்கிளிங் அல்லது ஸ்விம்மிங் செய்பவர்கள், தினமும் இரண்டு முட்டைகளை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். இதைவிடக் கூடுதலான நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள், இரண்டு முழு முட்டையுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்துச் சாப்பிடலாம். இதுவே போதுமானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான மீன் பிரியாணியும் அதற்கேற்ற ஏற்ற மீனும்…
இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ராஜ்நாத் சிங் வருகை…பாஜக கேட்ட 100 சீட்… திமுகவின் ரியாக்ஷன்!
ஆவணி மாத நட்சத்திர பலன் – விசாகம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)