காலை 9.18-க்கு விண்ணில் பாய்கிறது… எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

டிரெண்டிங்

இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ள சிறிய வகை எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் இன்று காலை(ஆகஸ்ட் 7) விண்ணில் பாய இருக்கிறது.  

பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அதில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 1,860 கிலோ வரையிலும்; ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், 4,000 கிலோ வரையிலும் உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை.

சிறியவகை ராக்கெட்

அந்த வகையில் சிறிய செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல். வி. ராக்கெட்டிலேயே இதுவரை அதிக பொருட்செலவில் விண்ணில் செலுத்தி வந்தது இஸ்ரோ. எனவே நானோ வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக சிறிய வகை ராக்கெட்களை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி ‘மைக்ரோ, நானோ’ என, 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்’ ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

 9.18 மணிக்கு புறப்பாடு

இந்த ராக்கெட்  (இன்று ஆகஸ்ட் 7) காலை 9.18 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 02, ஆசாதிசாட்’ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி,  விண்ணில் பாய்கிறது.


பார்வையாளர்களுக்கும் அனுமதி

அதில், 145 கிலோ எடை உடைய, ‘இ.ஓ.எஸ்., – 02’ செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்க கூடியது. மேலும், 8 கிலோ, ‘ஆசாதிசாட்’ செயற்கைக்கோளானது, கிராமங்களில் உள்ள, 75 பள்ளிகளை சேர்ந்த மாணவியர் உருவாக்கிய மென்பொருளை உள்ளடக்கியது.  இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்வையிடுவதற்காக பார்வையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

குலசேகரப்பட்டினம் ஏவுதளம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இஸ்ரோ முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணி காலதாமதம் ஆகி வருவதால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே எஸ்.எஸ். எல்.வி ராக்கெட் ஏவப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

போதை மாஃபியா: தமிழகத்தில் தீவிரம் காட்டும் என்.ஐ.ஏ.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *