வெளியானது ஏசஸின் புதிய கேமிங் மானிட்டர்!

டிரெண்டிங்

தற்போதைய இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு தீராக் கனவு என்றால் அது கேமிங் மானிட்டர் தான். செல்போன் மற்றும் கம்பியூட்டர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஏசஸ் தற்போது 42 இன்ச் திரை அளவு கொண்ட ROG Swift என்ற புதிய கேமிங் மானிட்டரை வெளியிட்டுள்ளது.

முன் பகுதியில் 10W திறனுடைய இரண்டு ஸ்பீக்கர்களும், பின் பகுதியில் 15W திறன் கொண்ட Woofer உடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தரமான ஆடியோவை வெளிப்படுத்தும்.

OLED திரையில் 4K ரெசல்யூசன் கொண்டுள்ள இந்த மானிட்டர்கள் உயர்தர கேமிங் அனுபவத்தை தேடும் விளையாட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

OLED திரை உள்ளதால் சிறந்த வண்ண தரத்தை வழங்கவல்லது. மானிட்டர் வெப்பமடைவதிலிருந்து தடுக்க குளிரூட்டும் அமைப்புடனே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிரூட்டும் முறையானது மானிட்டரின் உள் வெப்பநிலையை 8 சதவிகிதம் வரை குறைக்கிறது. OLED திரை மேம்பாடு மற்றும் விளையாடும் போது இடையூருகளை தவிர்த்து ஒரு சீரான அனுபவத்தை தருகிறது.

இணைப்புகளை பொறுத்தவரை இரண்டு HDMI 2.1 போர்ட், இரண்டு HDMI 2.0 போர்ட், யூஎஸ்பி hub மற்றும் பல்வேறு சாதனங்களை இணைக்க Tripod socket வசதி உள்ளது.

13.58 கிலோகிராம் எடை கொண்ட ROG Swift மானிட்டரின் விலையானது ரூ.1.90 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.

-பவித்ரா பலராமன்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

ராஜமௌலி படத்தில் வில்லியாக காஜல் அகர்வால்

“ஆ.ராசாவின் 15 சொத்துகள் பறிமுதல்” : அமலாக்கத் துறை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0