பேதிக்கு மருந்து எடுக்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம் பலருக்கும் இருக்கலாம். ஆனால், பேதிக்கு மருந்து எடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் பலன்களையும் அறிந்துகொண்டால் ஐயமெல்லாம் விலகும்.
பேதிக்கு மருந்து எடுக்கும் நாளில் கழிச்சல் ஏற்பட்டு நிச்சயம் உடல் சோர்வுடன் இருக்கும். சோர்வுடன் அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படுகிறதே என்று பதற்றப்படாமல் மோர் பருகிக் கொண்டே இருந்தால் பேதி நிற்கும்.
தேவைப்படின் உங்கள் மருத்துவரின் அலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்டால், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உதவியாக இருக்கும்.
பேதிக்கு மருந்து எடுக்கும் நாளன்று வேறு வேலைகளைச் செய்யலாம் எனும் திட்டமிடல் கூடாது. ‘அன்று பேதிக்கான விடுமுறை’ என்று உங்கள் குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
நமது உடலுக்காக நேரம் செலவழித்தால் மட்டுமே அவசர உலகில் ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது எப்போதெல்லாம் பேதிக்கு மருந்து எடுத்தீர்களோ அந்த நாளையும் குறித்து வைக்கலாம்.
அடுத்த முறை சரியான இடைவெளியில் பேதி மருந்தெடுக்க உதவியாக இருக்கும். பேதி மருந்தெடுக்கும்போது, வீட்டில் ஒருவர் உடனிருப்பது கட்டாயம்.
மலம் கழிப்பதற்குப் பொதுவாக இந்திய முறை கழிப்பறையே சிறந்தது எனினும், பேதிக்கு மருந்தெடுக்கும்போது மட்டும் மேற்கத்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீர்த்துவம் குறைவதால் சிலருக்கு மெல்லிய தசைப்பிடிப்பு (Cramps) ஏற்படலாம் என்பதால் அத்தருணத்தில் மட்டும் மேற்கத்திய கழிப்பறை சிறப்பான தேர்வாக இருக்கும்.
குத்த வைத்து மலம் கழிக்கும் இந்திய முறை கழிப்பறையில் சில முறை பேதியான பிறகு அமர்ந்து மீண்டும் எழும்போது சிலருக்கு சிரமமாக இருக்கலாம்.
வெப்பம் மிக அதிகமாக இருக்கும் கோடை நாட்களில் பேதிக்கு மருந்தெடுப்பதைத் தவிர்க்கலாம். காரணம், கூடுதல் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பது நல்லது. மாதவிடாய் காலத்தில், காய்ச்சல் இருக்கும்போது, நோயிலிருந்து மீண்டவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் பேதிக்கான மருந்தை எடுக்கக் கூடாது.
எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவரின் ஆலோசனையின்றி பேதி மருந்துகளை எடுக்க வேண்டாம். உங்கள் உடல்நிலை, உடல் எடை, காலம், நோய்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர் உங்களுக்குத் தேவையான மருந்தையும் அளவையும் பரிந்துரைப்பார்.
சிறுவர்கள் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் முதியவர்கள், மருத்துவரைக் கலந்தாலோசித்து எளிமையான பேதி மருந்துகளை எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது எவ்வளவு தவறானதோ, அதே வகையில் மருத்துவரின் ஆலோசனையின்றி பேதிக்கு மருந்தெடுப்பதும் தவறானதே என்கிறார்கள் மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பிரெட் வெஜ் ஆம்லெட்!
பதவியேற்பு விழாவா? தெலுங்கு சினிமாவா? அப்டேட் குமாரு
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனையா? செல்வப்பெருந்தகை விளக்கம்!
அம்மு அபிராமியின் காதலர் இவரா? – அதிர்ச்சியில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!