பியூட்டி டிப்ஸ்: ஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்!
‘நம்ம ஃபிரெண்டு வெச்சுருக்காங்க’, ‘அந்தப் பொண்ணு போட்டிருந்தாங்க’ என்று ஏதாவது ஆர்டர் செய்வீர்கள். ஆனால் அதே மாதிரியான டிரஸ்ஸோ, பொருளோ ஆயிரக்கணக்கில் ஆப்களில் கொட்டிக் கிடக்கும். அதில் எது ஒரிஜினல் பிராண்ட், தரமானது என்று சரிபார்த்து ஆர்டர் செய்யுங்கள்.
எந்தப் பொருளை வாங்குவதற்கு முன்பும், அதை ரிட்டன் செய்யலாமா? அதற்கான கண்டிஷன்கள் எவை? என்பதைப் படித்து தெரிந்துக்கொள்வது அவசியமானது.
‘அழகாக இருக்கிறது’, ‘பிடித்திருக்கிறது’ என்று நினைத்து வாங்காமல், அந்தப் பொருளை வாங்கினால் உங்கள் தேவை பூர்த்தி ஆகுமா? என்பதைப் பார்த்து வாங்குங்கள்.
இப்போதைக்கு தேவையில்லை என்று தோன்றும் பொருட்களை வாங்கவே வாங்காதீர்கள். இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் டிரெண்ட் மாறும். அதனால் நீங்கள் இப்போது வாங்கும் பொருள், உங்களுக்குத் தேவைப்படும்போது பழைய மாடல் ஆகி இருக்கும். அதனால் ஜாக்கிரதை. ‘பிடித்திருக்கிறது’ என்று எந்தத் தேவையில்லாத பொருளையும் வாங்கவே வாங்காதீர்கள்.
சில ஆப்களில் பொருட்கள் வாங்கும்போது, இந்த பேமெண்ட் ஆப்பில் காசு கட்டினால் சலுகை, இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் தள்ளுபடி போன்ற சலுகைகள் இருக்கும். இதை கவனமாக கவனித்து ஆஃபர்கள் பெறுங்கள். உங்களிடம் கிஃப்ட் கார்டு இருந்தால், ‘அதில் வைத்து என்னென்ன வாங்கலாம்?’, ‘எவ்வளவு ரூபாய்க்கு வாங்கலாம்?’ ஆகியவற்றில் தெளிவாக தெரிந்துகொண்டு ஷாப்பிங் செய்யுங்கள்.
செலவை குறைப்பது, பொருளை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு மெனக்கெடுகிறோமோ, அதே அளவுக்கான மெனகெடல்களை ஆப்பை தேர்ந்தெடுப்பதிலும் செய்ய வேண்டும். ‘கம்மி விலை, அதிக தள்ளுபடி’ என்று எதாவது ஆப்பில் பொருட்களைத் தேர்வு செய்யவே செய்யாதீர்கள். எந்த ஆப்பில் தரமான பொருள், சரியான ரிட்டன் பாலிசி, சூப்பரான ஆஃபர் திட்டங்கள் கிடைக்கிறதோ… அந்த ஆப்பைத் தேர்ந்தெடுங்கள்.
ஹேப்பி ஷாப்பிங் மக்களே!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாக்காளர் அட்டையை திருத்துவது எப்படி?
யார் இந்த அமரன் முகுந்த் வரதராஜன்? இறப்பில் ஒரு சொட்டு கண்ணீர் வடிக்காத மனைவி!
திருப்பூர்: பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு… போராட்டம் நடத்திய விசிக